டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிதிஷ் கட்சி எம்எல்ஏக்களை தூக்கிய பாஜக: 2024 தேர்தலில் இருக்கு ட்விஸ்ட்.. சவால் விடுத்த ஜேடியூ

Google Oneindia Tamil News

புதுடெல்லி: மணிப்பூரில் நிதிஷ் கட்சியின் 6-இல் 5 எம்எல்ஏக்களை பாஜக கொத்தாக தூக்கிய நிலையில், பாஜகவுக்கும் ஜேடியூ கட்சிக்கும் இடையே காரசார வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

மணிப்பூரில் நிதிஷ் கட்சியின் எம்.எல்.ஏக்களை கொத்தாக தூக்கிய பாஜக... 2024- தேர்தலில் காத்திருக்கு ட்விஸ்ட்.. சவால் விடுத்த ஜேடியூ

பீகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களையும் பாஜக 74 இடங்களிலும் வென்று இருந்தது.

நிதிஷ் குமாரின் ஜேடியு 43 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால் பாஜக நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கியது.

பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர! பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர!

 பாஜக நிதிஷ் மோதல்

பாஜக நிதிஷ் மோதல்

பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்த நிதிஷ் குமாருக்கு பாஜக மீது ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தி இருந்து வந்தது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து மீண்டும் பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். பல மாநிலங்களில் பாஜக மேற்கொண்ட இந்த வித்தையை நிதிஷ் குமார் பீகாரில் அரங்கேற்றினார். இதனால் அப்செட்டான பாஜக நிதிஷ் குமாரை குறை கூறி வந்தது.

 நிதிஷ் குமாருக்கு பதிலடி

நிதிஷ் குமாருக்கு பதிலடி

இந்நிலையில், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படு சில வாரங்களே ஆகும் நிலையில், நிதிஷ் குமாருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்துள்ளது பாஜக. அங்கு நிதிஷ்குமார் கட்சியில் இருந்த 6 எம்.எல்.ஏக்களில் 5 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்த சில வாரங்களிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது

5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது

மணிப்பூரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்கள் 6 பேரில் ஐந்து பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்தது நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்திய நிலையில், ட்விட்டரில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டனர்.

 பீகாரிலும் காலி செய்யப்படும்

பீகாரிலும் காலி செய்யப்படும்

பீகார் முன்னாள் துணை முதல்வரும் அம்மாநில பாஜக தலைவருமான சுஷில் மோடி தனது ட்விட் பதிவில், ''அருணாசல பிரதேசத்தை தொடர்ந்து மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதா தளம் துடைத்தெறியப்பட்டுள்ளது. விரைவில் பீகாரிலும் லாலு கட்சியால் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் காலி செய்யப்படும்'' என்று பதிவிட்டு இருந்தார்.

 பகல் கனவு காணவேண்டாம்

பகல் கனவு காணவேண்டாம்

இதற்கு பதிலடிக்கு கொடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி பகல் கனவில் இருக்க வேண்டாம். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக துடைத்தெறியப்படும். அருணாசல பிரதேசத்தில் கூட்டணி தர்மத்தை பாஜக பின்பற்றவில்ல. அருணாசல பிரதேசம் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தியே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது என்பது நினைவில் இருக்கட்டும். எனவே ஐக்கிய ஜனதா தளத்தை விடுவித்து விடலாம் என்று பகல் கனவு காணவேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
With the BJP bagging 5 out of 6 MLAs from Nitish's party in Manipur, a war of words is going on between the BJP and the JDU.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X