2 டிஜி மருந்தை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தரவே கூடாது - டிஆர்டிஓ
ஜூன் மாதம் மத்தியில் தான் இம்மருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியாக விற்பனை தொடங்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மருந்தை யாருக்கு தரலாம் யாருக்கு தரக்கூடாது என வழிகாட்டு நெறிமுறை
டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் 2 டிஜி மருந்தினை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக் கூடாது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அதன் 2டிஜி மருந்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துறையின்படி இந்த 2டிஜி மருந்தினை நோயாளிகளுக்குத் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து 2 டிஜி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் கூட்டாக கடந்த மே 17ஆம் தேதி வெளியிட்டனர்.
2டிஜி மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 2 முதல் 3 நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளது. மருந்தை உட்கொள்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை 40 சதவிகிதம் வரை குறைக்கலாம் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த 2 டிஜி மருந்தின் மருத்துவப் பரிசோதனைகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த இம்மருந்து உதவுவது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை வெகுவாக குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பு மருந்துகள் ஊசிகள் மூலமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது 2 டிஜி பவுடர் வடிவில் சாச்செட் எனப்படும் சிறிய பாக்கெட்டில் பவுடராக கொடுக்கப்படும். இந்த மருந்தை தண்ணீரில் கரைப்பதன் மூலம் வாய்வழியாக எடுத்துக்கொள்ள முடியும்.
இது வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட குவிப்பு இந்த மருந்தை தனித்துவமாக்குகிறது, எனச் சொல்லப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
2டிஜி தூளின் ஒரு சாச்செட் ரூ.990க்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலை தனியாருக்கு தான் என்றும், மத்திய, மாநில அரசுகள் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் இந்த மருந்து விற்கப்படும் என்று டாக்டர் ரெட்டி ஆய்வகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது
ஜூன் மாதம் மத்தியில் தான் இம்மருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியாக விற்பனை தொடங்கும், என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை, டாக்டர் ரெட்டி ஒரு அறிக்கையில் தெரிவித்தாவது, கொரோனா எதிர்ப்பு மருந்தான 2டிஜியின் விநியோகம் வருகிற ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. இந்த மருந்து இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், 2 டிஜி என்ற பெயரில் போலி அல்லது சட்டவிரோத தயாரிப்புகளை விற்கும் முகவர்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
கொரோனவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2 டிஜி மருந்து மகத்தான நன்மையை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அதன் 2டிஜி மருந்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துறையின்படி இந்த 2டிஜி மருந்தினை தரலாம்.
மிதமான அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை 2டிஜி மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த மருந்தை எடுத்துக்கொள்ள விரும்பும் நோயாளிகள் தங்களின் உதவியாளர்கள் வாயிலாக மருத்துவமனையை டாக்டர் ரெட்டிஸ் லேபை அணுக வலியுறுத்த வேண்டும். [email protected] இணையதளத்தில் பதிவு செய்தும் இந்த மருந்தை பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால், அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications