துளிர்க்கும் நம்பிக்கை! எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்த 30 வயது தாய்.. எப்படி நடந்தது?
டெல்லி: அரியதொரு நிகழ்வாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளது, மிகப் பெரியளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
1980களின் தொடக்கத்தில் முதலில் கண்டறியப்பட்ட acquired immunodeficiency syndrome எனப்படும் எய்ட்ஸ், உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 1990களில் உலகெங்கும் பரவிய எய்ட்ஸ் நோய் பெருந்தொற்றாகவும் அறிவிக்கப்பட்டது.
எந்த வித மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தவே முடியாத ஒரு கொடிய நோயாகவே எய்ட்ஸ் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் மிகவும் அரியதொரு நிகழ்வாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

அர்ஜென்டினா இளம்பெண்
அர்ஜென்டினாவில் உள்ள Esperanza நகரத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுக்குக் கடந்த 2013ஆம் ஆண்டு முதலில் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு குழந்தைக்குத் தாயான அப்பெண் HIV "எலைட் கன்ட்ரோலர்" என்ற நிலையில் இருந்தார். அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடலில் எய்ட்ஸ் கண்டறியப்படவில்லை. குறிப்பாக, எய்ட்ஸ் சிகிச்சைக்கான சக்தி வாய்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திய பிறகும் கூட அவரது உடலில் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைசிங் க்யூர்
பொதுவாக இந்த எய்ட்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள டிஎன்ஏவில் கலந்துவிடும். இதனால் தான் பெற்றோரிடம் இருந்தும் எய்ட்ஸ் வைரஸ் குழந்தைகளுக்குப் பரவுகிறது. ஆனால், இந்த பெண்ணின் டிஎன்ஏ-ஐ ஆய்வு செய்த போது அதிலும் எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, இந்தப் பெண்ணுக்கு "ஸ்டெர்லைசிங் க்யூர்" ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதாவது இப்பெண்ணின் உடலில் எய்ட்ஸ் வைரசின் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

எப்படி நடந்தது
இந்த இளம்பெண்ணுக்கு இது எப்படி நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இருப்பினும், உலகில் ஏற்கனவே, இரண்டு எச்.ஐ.வி நோயாளிகள் குணமடைந்ததாகக் கருதப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் இருவரும் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். இதுபோன்ற எந்தவொரு சிகிச்சையும் எடுக்காமல் இந்த இளம்பெண் எய்ட்ஸ் நோயில் இருந்து குணமடைந்தது எப்படி என்பது மருத்துவ வல்லுநர்களுக்கே புரியாத புதிராகவே உள்ளது.

மிக முக்கியம்
இது தொடர்பாக பாஸ்டனின் ராகன் இன்ஸ்டிடியூட்டின் தலைமை ஆய்வாளர் சூ யூ கூறுகையில், "அப்பெண்ணின் ரத்தம் மற்றும் திசுக்களைத் தீவிரமாகப் பகுப்பாய்வு செய்துவிட்டோம். இருப்பினும், அதில் எச்ஐவி வைரஸை கண்டறிய முடியவில்லை. இந்த நோயாளி இயற்கையாகவே எச்ஐவி வைரஸில் இருந்து முற்றிலுமாக குணமடைந்திருக்கலாம். இது மிகவும் முக்கிய ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது. எச்.ஐ.வி நோயாளிகள் மிகவும் அரிதாக ஆனால் முழுமையாகக் குணமடையும் வாய்ப்பு இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.

ஆய்வாளர்கள்
எய்ட்ஸ் நோயை அழிக்கப் பல ஆண்டுகளாகவே தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், எதிலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக அழிக்க முடியவில்லை. எய்ட்ஸ் தீவிரத்தன்மையை குறைக்க மருந்துகள் உள்ளன. இருப்பினும், இந்த மருந்துகள் சாப்பிடுவதை நோயாளிகள் நிறுத்தினால், மீண்டும் எய்ட்ஸ் பாதிப்பு தீவிரமாகும் என்ற நிலையே தற்போது வரை உள்ளது. அந்த நிலைமையை மாற்றி முற்றிலுமாக நோயாளிகளைக் குணமடைய வைக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எய்ட்ஸ் பொருந்தொற்று
எய்ட்ஸ் பெருந்தொற்று முதலில் கண்டறியப்பட்டது முதல் இதுவரை 8 கோடி பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 3.63 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகெங்கும் 3.77 கோடி பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த உலக நாடுகளும் ஐநா சபையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2020இல் உலகெங்கும் மொத்தம் 15 லட்சம் பேருக்கு மட்டுமே எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications