டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவதூறு செய்தி...இரண்டு ஆங்கில டிவி சேனல்களுக்கு எதிராக...நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகர்கள் வழக்கு!!

Google Oneindia Tamil News

டெல்லி: தங்களைப் பற்றி தவறான அவதூறு செய்திகளையும், போதைபொருள் தொடர்பான செய்திகளையும் டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் சேனல் இரண்டும் பரப்பி வருவதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் உள்பட பலரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பாலிவுட்டுக்கு எதிரான பொறுப்பற்ற, கேவலமான மற்றும் அவதூறான கருத்துக்களை பரப்புவதில் இருந்து ரிபப்ளிக் டிவியின் தலைமை எடிட்டர் அர்னாப் கோஸ்சுவாமி, ரிப்போர்டர் பிரதீப் பண்டாரி, டைம்ஸ் நவ் தலைமை எடிட்டர் ராகுல் சிவசங்கர், எடிட்டர் நவிகா குமார் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாலிவுட்டைச் சேர்ந்த 34 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

34 producers bollywood stars filed case against 2 TV channels

மேலும் இந்தி திரையுலகில் தனிப்பட்ட நபரின் விஷயத்தில் தலையிடுவதை தடுக்க வேண்டும் என்று தங்களது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பின்னர் இந்தி திரையுலகம் சம்பந்தப்பட்ட சில பெரிய நட்சத்திரங்களின் பெயர் இழுக்கப்படுவதாக அந்த துறையைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் மரணத்துக்குப் பின்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சில நடிகர், நடிகைகளின் பெயரும் அடிபட்டது. இவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் இந்த வார இறுதியில் விசாரணைக்கு வருகிறது.

இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம், சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம், திரைப்படம் மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் சங்கம், ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட், ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ், அக்ஷய் குமார் கபே ஆப் குட் பிலிம்ஸ், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ், யாஷ் ராஜ், ஃபர்ஹான் அக்தர், ரித்திஷ் சித்வானி எக்செல் என்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து இந்த வழக்கை தொடுத்துள்ளன.

கேபிள் டிபி நெட்வொர்க் சட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் வெளியிட்ட சட்டத்திற்கு விரோதமான அனைத்து அவதூறு தகவல்களையும் வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த துறையில் இருக்கும் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமை என்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது முழு இண்டஸ்டிரியையும் பாதிக்கிறது. இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் இந்த துறையை சார்ந்து இருக்கிறார்கள். தற்போது அனைவரும் ஒன்றிணைந்து இருப்பது மகிழச்சியை அளிக்கிறது என்று சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

English summary
34 producers bollywood stars filed case against 2 TV channels
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X