வேலைவாய்ப்பு இல்லாத சோகம்.. 2020ம் ஆண்டில் நாடு முழுக்க 3,528 பேர் தற்கொலை: மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: 2020ம் ஆண்டில் மட்டும் வேலைவாய்ப்பில்லாமல் 3,528 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
இந்தியாவில் தற்கொலை செய்தவர்களின் விவரங்களை ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் கேட்டிருந்த நிலையில், இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அவரது பதில் விபரம் வருமாறு:

வேலையின்றி தற்கொலை
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரப்படி 2020ல் இந்தியாவில் 2020ல் மட்டும் வேலையின்றி 3548 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் குறிப்பாக கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் மட்டும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

மாநிலம் வாரியாக
வேலையின்றி அதிக தற்கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 720 பேர் தற்கொலை செய்தனர். இதற்கு அடுத்த இடத்தில் 625 தற்கொலையுடன் மராட்டியம், 336 தற்கொலையுடன் தமிழ்நாடு, 234 தற்கொலையுடன் அசாம், 227 தற்கொலையுடன் உத்தர பிரதேச மாநிலம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடன் செலுத்த முடியாதவர்கள்
மேலும் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த இயலாதது, நிறுவனங்கள் திவால் ஆன வகையில் 2018 முதல் 2020 வரை மொத்தம் 16,061 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 2018ல் 4,910, 2019ல் 5,908, 2020ல் 5213 பேர் தற்கொலை செய்திருந்தனர்.

7 ஆண்டில் எவ்வளவு
2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காக 18,772 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி ஆண்டுக்கு சராசரியாக 2,681 உயிரை மாய்த்துள்ளனர். 2014க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்த கடைசி 7 ஆண்டை ஒப்பிடும்போது இது அதிகமாகும். காங்கிரஸ் ஆட்சி செய்த 2007 முதல் 2014 வரை மொத்தம் 15,332 பேர் தற்கொலை செய்திருந்தனர். என அவரது பதிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications