டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு.. 43% இந்தியர்கள் சீன பொருட்களை சீண்டவில்லை.. வெளியான சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய வீரர்கள் தடுத்து தங்கள் இன்னுயிரை இந்த நாட்டுக்காக ஈந்த தியாக தினம் இன்று.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

43 சதவீதம் இந்தியர்கள்

43 சதவீதம் இந்தியர்கள்

இதனிடையே இந்த தாக்குதலை அடுத்து கடந்த ஓராண்டில் சீன பொருட்கள் எதையும் வாங்கவில்லை என்று 43 சதவீதம் இந்தியர்கள் ஒரு சர்வேயில் தெரிவித்துள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற கம்யூனிட்டி சமூக வலைத்தளத்தில் இதுபோல ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் கருத்து கூறிய 43% இந்தியர்கள் இந்த ஒரு வருடத்தில் சீன நாட்டுப் பொருட்கள் எதையும் வாங்காமல் புறக்கணித்து உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிரெண்டு பொருட்கள்

ஒன்றிரெண்டு பொருட்கள்

எஞ்சிய சதவீத மக்கள் சீனாவில் உற்பத்தியான பொருட்களை வேறு வழியில்லாமல் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டும் வாங்கியுள்ளோம் மற்றபடி பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

டிக் டாக் உட்பட பல ஆப்கள் தடை

டிக் டாக் உட்பட பல ஆப்கள் தடை

கல்வான் பள்ளத்தாக்கு அத்துமீறலுக்கு பிறகு டிக்டாக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன நாட்டு சமூக வலைத்தள நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. செல்போன் செயலிகள் பல இயங்க முடியவில்லை. உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்பட்டது, இந்திய மக்களில் கணிசமானவர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனைக்கு பிறகு சீன பொருட்களை வாங்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரங்கள்

பிரச்சாரங்கள்

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் சீனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கே பின்னூட்டம் பகுதிக்குச் சென்று அந்த பொருட்கள் தரமற்றவை என்று கருத்துக்களை தெரிவித்து பிரச்சாரம் செய்தனர். ஸ்டார் மதிப்புகளை குறைத்தனர்.

சீன பொருள் வேண்டாம்

சீன பொருள் வேண்டாம்

இது போன்ற நடவடிக்கைகளின் விளைவாக சீன பொருட்கள் மீது இந்தியர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இந்த சர்வே எதிரொலிக்கிறது. சுமார் 18 ஆயிரம் பேரிடம் 281 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளதாக லோக்கல் சர்க்கிள்ஸ் தெரிவித்துள்ளது.

English summary
One year of Galwan valley attack: 43 percentage of Indians didn't buy any China made products in the last 12 months, says a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X