டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக ஆளும் 6 மாநிலங்களில் வாட் வரியும் குறைப்பு.. கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.12 குறைந்த பெட்ரோல்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக ஆட்சியில் உள்ள 6 மாநிலங்கள் - அசாம், திரிபுரா, கர்நாடகா, கோவா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரே பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்தது.

அதேபோல டீசல் விலையும் தற்போது பல மாநிலங்களில் சதமடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சரக்கை எடுத்துச் செல்லும் செலவு அதிகமாவதால் அத்திவாசியப் பொருட்கள் விலை உயரலாம் என அஞ்சப்பட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்பு பணம் கொடுக்கிறது.. அகிலேஷ் யாதவ் மீது பாஜக அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு பாகிஸ்தான் உளவு அமைப்பு பணம் கொடுக்கிறது.. அகிலேஷ் யாதவ் மீது பாஜக அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

கலால் வரி குறைப்பு

கலால் வரி குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும், மத்திய அரசின் வரியைக் குறைத்தால், பெட்ரோல் டீசல் விலை சற்று குறையும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைச் சற்றே குறைக்கும் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்

பாஜக ஆளும் மாநிலங்கள்

இந்நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள 6 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இதுவரை அசாம், திரிபுரா, கர்நாடகா, கோவா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இவை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாட் வரி

வாட் வரி

அசாம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது, உத்தரகண்ட் மாநிலத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ₹2 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு குறையும்

எவ்வளவு குறையும்

அண்டை மாநிலமாகக் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 113.93க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ 104.5க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பால் அங்கு பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாயும் குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்களும் இதேபோல பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் அது பேருதவியாக இருக்கும் என பல்வேறு தரப்பட்ட மக்களும் வலியுத்தியு வருகின்றனர்..

English summary
Six BJP-ruled states have announced additional cuts in prices of petrol and diesel. Excise duty on Petrol and Diesel to be reduced by Rs 5 and Rs 10 respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X