டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! அக்னிபாத் விமானப்படைக்கு 94,000 பேர் விருப்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: அக்னிபாத் திட்டம் ராணுவத்தின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல் என்றும், அக்னிவீரர்களுக்கு பெண் கூட கிடைக்காது எனவும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    Agnipath In Indian Army | Agnipath என்றால் என்ன? யார் இந்த Agniveer? | #Defence

    இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிவீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

    இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

     அக்னிபாத் திட்டம்.. இளைஞர்கள் போராட்டம்.. ரயில்வே துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு..! அக்னிபாத் திட்டம்.. இளைஞர்கள் போராட்டம்.. ரயில்வே துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு..!

    ஏன் இந்த அக்னிபாத்?

    ஏன் இந்த அக்னிபாத்?

    இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

    இளைஞர்கள் கொந்தளிப்பு

    இளைஞர்கள் கொந்தளிப்பு

    இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

    ராணுவம் விளக்கம்

    ராணுவம் விளக்கம்

    இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, "ஒழுக்கமே எங்களின் அடிப்படை. ஒழுக்கக்கேடான செயல்களுக்கு இங்கு இடமில்லை. அக்னிபாத்தை திரும்பப்பெற முடியாது. உயரமான இடங்களில் பாதுகாப்பு பணியில் வயதானவர்களை ஈடுபடுத்துவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இளைஞர்களை தேர்வு செய்கிறோம். அக்னிவீரர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.ஒரு கோடி வழங்கப்படும்." என்றார்.

    ஆட்கள் தேர்வு

    ஆட்கள் தேர்வு

    ஒரு பக்கம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபக்கம், அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானப்படைக்கான ஆட்கள் தேர்வு கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. நேற்று காலை 10:30 மணி நிலவரப்படி 94,281 பேர் இந்த பணிக்காக விண்ணப்பித்து இருக்கின்றனர்.

    English summary
    94,000 application received so far for Air force job in Agnipath scheme: அக்னிபாத் திட்டம் ராணுவத்தின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல் என்றும், அக்னிவீரர்களுக்கு பெண் கூட கிடைக்காது எனவும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X