தமிழ்நாடு இந்தியா இல்லையா.. கியரை மாற்றிய மோடி.. லோக்சபாவில் ஆவேச அட்டாக்
டெல்லி: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, திமுகவைத் தனது பேச்சில் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அங்கே ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரிந்த நிலையில், இன்னும் அமைதியான சூழல் ஏற்படவில்லை.

மணிப்பூர் வன்முறையைத் தடுக்க அங்குள்ள பாஜக அரசு தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்தனர். "இந்தியா" கூட்டணி எம்பிகள் நேரடியாக வன்முறை ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர்.
மணிப்பூர்: அங்கு நிலைமை ரொம்பவே மோசமாக இருப்பதாகவும் வன்முறையைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் குறித்துக் கடந்த 3 நாட்களாக லோக்சபாவில் விவாதம் நடைபெற்று வந்தது.
இதில் முதல் நாளில் ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் முதல் நாளில் பேசவில்லை. ராகுல் காந்தி இரண்டாவது நாளிலேயே பேசினார். இதற்கிடையே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது ஒரு இடத்தில் அவர் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவர், இந்தியா வட நாடு எனக் குறிப்பிட்டதாக விமர்சித்தார்.
தமிழ்நாடு இந்தியா இல்லையா: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "எதிர்க்கட்சிகள் கூட்டணி இந்தியாவையும் பிளவுபடுத்திவிட்டன. எதிர்க்கட்சிகள் கூட்டணி தங்கள் பெயரை மாற்றினாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. திமுகவைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போலும்.. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்தியா என்றால் வடநாடு என திமுக அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாடு மண் மகத்தானது.. ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகிய தலைவர்களைக் கொடுத்தது இந்த தமிழக மண். இந்த மண்ணில் இருந்து வரும் தலைவர் இப்படிப் பேசலாமா.. பெரிய பெரிய தலைவர்களை நாட்டிற்குக் கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்கள் இப்போது வருவது கவலையைத் தருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி முரண்பாடுகளால் நிறைந்த ஒரு கூட்டணியாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரே நிலைப்பாடு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
2014ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து வருகிறார்கள். அதன் பிறகு மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு என எந்தவொரு தனித்துவம் இல்லை" என்று அவர் சாடினார். மேலும், காந்தியின் பெயரைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்
திமுக அமைச்சர் என்ன சொன்னார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதை விமர்சித்தே பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் இப்படிப் பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைச்சர் எ.வ.வேலு, "ஒரு காலத்தில் இந்தியா என்பது மீது தாக்கம் இருந்தது இல்லை. "இந்தியா" என்ற வார்த்தை மீது கூட இங்குப் பெரிதாகத் தாக்கம் இருந்தது இல்லை. இந்தியா என்றால் ஏதோ வடக்கே இருக்கும் ஒரு ஊர் என்றே மக்கள் கருதினர். நம்ம ஊர் தமிழ்நாடு தான். இதை முடிந்தால் திராவிட நாடு என செய்வது குறித்து யோசிப்போம்.. நமது எண்ணங்கள் இப்படி தானே இருந்தது" என்றார். இதை விமர்சித்தே பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications