டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் குழந்தை நீ.. அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி-வீடியோ

    டெல்லி: ஒரு சிறுமி நாக்கை வெளியே நீட்டி மத்திய அமைச்சரையே கேலி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    நேற்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நாடே வியக்கும் வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து சொல்லி வந்தனர்.

    வரலாற்று சிறப்பு மிகுந்த இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் தாக்கல் செய்தார் என்று மத்திய அமைச்சர்கள் புளகாங்கிதம் அடைந்து பேட்டிகள் தந்தனர்.

    ஜெயந்த் சின்ஹா

    ஜெயந்த் சின்ஹா

    அப்படித்தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பட்ஜெட் குறித்து பேட்டி அளித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசி கொண்டும், பட்ஜெட்டை வரவேற்று மகிழ்ச்சியுடனும் கருத்தை சொல்லி கொண்டிருந்தார்.

    கேலி செய்தார்

    கேலி செய்தார்

    மத்திய அமைச்சரை சுற்றி ஒரு கூட்டமே நின்றிருந்தது. அதில் ஒரு சிறுமி மத்திய அமைச்சர் கருத்து சொல்ல சொல்ல, தன்னுடைய நாக்கை வெளியே நீட்டி கேலி செய்து கொண்டிருந்தார்.

    வீடியோ வைரல்

    எதிரே ஏகப்பட்ட காமிராக்களுடன் செய்தியாளர்கள் இருப்பது தெரிந்தும், மத்திய அமைச்சரின் பின்னாடியே நின்று கொண்டு, அவரையே இப்படி கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தற்செயலாக நடந்ததா?

    தற்செயலாக நடந்ததா?

    சிறுமி தற்செயலாக நாக்கை இப்படி நீட்டினாரா? அல்லது வேண்டுமென்றே மத்திய அமைச்சரை கிண்டல் செய்ய இப்படி செய்தாரா என தெரியவில்லை. ஆனால் ஓரிரு முறை என்றிலாமல் அமைச்சர் பேசும்போது, தொடர்ந்து சிறுமி இப்படி செய்த செயல் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    English summary
    Girl teases Central Minister Jayant Sinha outside Parliament Video goes viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X