இந்தியாவில் ஒரே நாளில்.. 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை.. பிரதமர் மோடி பாராட்டு!
டெல்லி: இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.

தடுப்பூசி
இத்தியாவில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக அதனை போட்டு வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இடையில் சில மாதங்கள் தடுப்பூசி செலுத்தும் இலக்கில் இந்தியா கொஞ்சம் தடுமாறியது. தற்போது தடுப்பூசி போடும் பணி மீண்டும் சூடுபிடித்துள்ளது.

1 கோடி பேர்
இந்த .நிலையில் இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார். ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும்.

நரேந்திர மோடி
இதனை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ' இன்றைய தடுப்பூசி எண்ணிக்கையை பாருங்கள். 1 கோடியை தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மொத்தம் 62 கோடி
இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18-44 வயதுடையவர்கள் 23,72,15,353 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 2,45,60,807 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர். . நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 60,07,654 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 46,88,114 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 23,36,159 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications