இது ஆப்கானிஸ்தான் இல்ல! நுபுர் சர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கு! ஆதரவாய் வந்த கங்கனா ரனாவத்!
டெல்லி : நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில், சர்மாவிற்கு அவரது கருத்துக்களை சொல்வதற்கு உரிமை இருக்கிறது என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவாக பேசியுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். பல இஸ்லாமிய நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவின் தூதர்களை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நுபுர் சர்மா விவகாரம்
இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

நாளுக்கு நாள் விஸ்வரூபம்
நாளுக்கு நாள் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நுபுர் சர்மா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென மகராஷ்டிரா மாநில போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மும்பை போலீசாரும் தனியே சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நுபுர் சர்மா கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை கங்கனா ரனாவத்
இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு அவரது கருத்துக்களை சொல்வதற்கு உரிமை இருக்கிறது என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவாக பேசியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ள கங்கனா," நூபுர் சர்மாவுக்கு தனது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. அதற்கு அவர் தகுதியானவர், எல்லா வகையான அச்சுறுத்தல்களும் அவரை குறிவைத்து வருவதை நான் காண்கிறேன்,
Recommended Video

திடீர் ஆதரவு
இந்துக் கடவுள்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள், அவ்வாறு அவமதிக்கப்படும் போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறோம், தயவுசெய்து நீங்களும் அதைச் செய்யுங்கள். இது ஆப்கானிஸ்தான் அல்ல, ஜனநாயகம் என்ற செயல்முறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முறையான செயல்படும் அரசாங்கம் எங்களிடம் உள்ளது... மறந்துவிடுபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல்" என கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications