ஆப்கானில் பெண்களின் உரிமை முழுமையாக புறக்கணிப்பு.. இந்தியாவில் இருக்கும் ஆப்கான் அகதிகள் வேதனை!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுக்க, முழுக்க கடும் பயத்தில் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று ஒரு சில மக்கள் தவித்து வருகின்றனர்.

தாலிபான்கள் ஆட்சி
இங்கிருந்து சென்றால் போதும் என நினைத்து ஆப்கானில் இருந்து வெளியேறி பிற நாடுகளுக்கு சென்று வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதால் பெண்களுக்கு இருக்கும் முழு சுதந்திரமும் பறிக்கப்படும் என்று கருதியே ஏராளமான பெண்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆனால் ''எங்களது ஆட்சியில் பெண்கள் உரிமை மதிக்கப்படும்.ஷரியத் சட்டப்படி பெண்கள் உரிமைகள் பேணப்படும்'' என்று தாலிபன்கள் உறுதி அளித்து விட்டனர். ஆனால் அங்கு இருந்து வரும் தகவல்கள் முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளன.

ஏதும் செய்ய முடியாது
மூன்று வருடங்களுக்கு முன்பு தனது முதுநிலைப் படிப்பைத் தொடர டெல்லி வந்த ஆப்கானை சேர்ந்த ஆரா நபிஸாடா ஆப்கானில் தனது உறவினர்கள் படும் பாட்டை வேதனையுடன் விவரிக்கிறார். ஒவ்வொரு நாளும், ஏதாவது புதியது சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. உறவினர்கள் மற்றும் அண்டைவீட்டாரர்கள் இறந்து கொண்டிருக்கும் சோக செய்தியை எனது சகோதரர் அனுப்பி வருகிறார். மேலும் இங்கிருந்து நான் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது'' என்று கூறுகிறார்.

அங்கீகரிக்கவில்லை
இதற்கிடையே ஆப்கானில் தவித்து வரும் தங்களது உறவினர்களுக்கு உதவக்கோரி டெல்லி மண்டி ஹவுஸில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆப்கான் மாணவர்கள் உள்பட ஆப்கானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் நாட்டினரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்", "தாலிபான்களை சாக்காக வைத்து இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை இந்திய அரசு நிராகரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராக உள்ள தாலிபான்களை நாங்கள் எந்த வகையிலும் அங்கீகரிக்கவில்லை'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

தயவு செய்து உதவ வேண்டும்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆரா நபிஸாடா மேலும் கூறுகையில், ' எனது குடும்பம் காபூலில் உள்ளது. அவர்கள் விமான நிலையத்திற்குச் செல்கிறார்கள், ஆனால் விமானங்கள் இல்லை. அவர்களுடன் சரியாகப் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அரசு தயவு செய்து உதவ வேண்டும்' என்று கூறுகிறார். சதாஃப் ரஹீம் (24) என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

உரிமைகள் புறக்கணிப்பு
ஆனாலும் அங்கு இருந்து தனது நண்பர் கொடுக்கும் தகவல்களை வேதனைபட தெரிவிக்கிறார் அவர்.''நான் நேற்று ஆப்கானிஸ்தானில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவளது கர்ப்பிணி சகோதரியை உரிய தேதியில் இருந்தும் மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை என்று சொன்னாள் ... அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளன. தலிபான்கள் பொறுப்பேற்றவுடன், பெண்களின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுகிறார்.












Click it and Unblock the Notifications