டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்று “பூணூல்”.. இன்று குஜராத் சேட்டின் “தலைப்பாகை” - உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கில் பரபர வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில் நேற்று பூணூல் தொடர்பாக விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சேட்டுகள் அணியும் பாக்டி என்னும் தலைப்பாகை விவாதமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?

 உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவி தரப்பு வழக்கறிஞர் காமத், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் வாதம்

வழக்கறிஞர் வாதம்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையில் நீதிபதி ஹேமந்த் குப்தா, "அடை அணிவது அடிப்படை உரிமை எனில், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாக இருக்கும். மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, இவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள்." என்று கூறினார்.

பூணூல் விவாதம்

பூணூல் விவாதம்

அப்போது வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது பூணூல், ருத்ராட்சம் போன்றவற்றை அணிவதாக தெரிவித்தார். குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, "பூணூல், ருத்ராட்சம் சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி பார்க்க மாட்டார்கள். அது பள்ளி ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை." என்றார்.

 மதசார்பின்மை

மதசார்பின்மை

அப்போது வழக்கறிஞர் காமத், "மத அடையாளங்கள் அணிந்து செல்லக்கூடாது என்பது மதசார்பின்மைக்கு எதிரானது." என்று கூறினார். நீதிபதி ஹேமந்த் குப்தா, "மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பிலேயே இல்லை." என்றார். அப்போது வழக்கறிஞர் காமத், "அரசியலமைப்பின் ஆன்மாவில் அது இருக்கிறது. முழு அரசியலமைப்பிலும் அதன் தாக்கம் உள்ளது." என்றார்.

வழக்கறிஞரின் மத அடையாளம்

வழக்கறிஞரின் மத அடையாளம்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் காமத், "மூத்த வழக்கறிஞர் பராசரன் மத அடையாளத்துடன் இருக்கிறார். ஆனால் பொது நிலையை பாதிக்கவில்லை." என்று கூற, நீதிபதி ஹேமந்த் குப்தா, "இங்கு ஒரு ஒழுங்கு உள்ளது. நீங்கள் மற்ற வழக்கறிஞர்களை ஒப்பிடக் கூடாது.

தலைப்பாகை

தலைப்பாகை

மறுநாள் மருத்துவர் தவான் பாக்டியை (தலைப்பாகை) மேற்கோள் காட்டினார். ராஜஸ்தான் மக்கள் வழக்கமாக தலைப்பாகை அணிவார்கள். குஜராத்தினிலும் தலைப்பாகை வழக்கமான ஒன்றுதானே என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் நீதிபதி கேள்வி எழுப்ப அவர், தலைப்பாகை அல்லது தொப்பி என்று பதிலளித்தார்.

English summary
After Poonool Gujarati Pagdi under discussion at Supreme court in Hijab case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X