அக்னிபாத் வீரர்களின் பணிக்காலம் 2 ஆண்டு வரை நீட்டிப்பு.. மத்திய அரசு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டின் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் செயல்பாட்டில் உள்ள அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களின் பணிக்காலம் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Agnipath Scheme

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில் 'அக்னிபாத்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பணியில் இணைவோரால் 4 ஆண்டு வரை சேவையாற்ற முடியும்.

அதன்பிறகு அவர்கள் ஓய்வூதிய பலன்களுடன் விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர், வீராங்கனைகளின் பணிக்காலம் 2 ஆண்டு வரை நீட்டிப்பு செய்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ராஜா ராமண்ணா இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது: ''அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர், வீராங்கனைகளில் தங்களின் முதல் 4 ஆண்டு பணியை முடித்த பிறகு அதில் 75 சதவீதம் பேருக்கு கூடுதலாக 2 ஆண்டு வரை பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் அவர்களின் பணிக்காலம் 6 ஆண்டுகளாக அதிகரிக்கும்.

அதன்பிறகு அவர்களின் செயல் திறன் ஆய்வு செய்யப்பட்டு நிரந்தரமாக பணியில் சேர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். தற்போது முப்படைகளில் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் 4 ஆண்டு பணிக்காலத்தை முடிக்க உள்ளனர். இவர்களின் செயல் திறன் சாதகமாக உள்ளது. இதனால் அவர்களின் பணி நீட்டிப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அக்னிபாத் திட்டம் அமலுக்கு வந்தபோதே அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற விஷயம் தெளிவாக இருந்தது. அதன்படி அக்னிவீரர்களின் செயல்பாடு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 75 சதவீதம் பேரின் பணிக்காலத்தை 2 ஆண்டு நீட்டிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்'' என்றார்.

நம் நாட்டில் அக்னிபாத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக 18 ஆயிரம் பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 4 ஆண்டு பணிக்காலத்தை அடுத்த வாரத்தில் முடிக்க உள்ளனர். இந்நிலையில் தான் 75 சதவீதம் பேருக்கான பணிக்காலம் 2 ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+