அலறும் கேரளா.. திடீரென எகிறும் கொரோனா.. அடுத்த அலையை ஏற்படுத்துமா.. உண்மையில் நடப்பது என்ன
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புது கொரோனா வேரியண்ட் தான் இதற்குக் காரணமாக இருப்பதால் எங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சம் தொடுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஜேஎன்.1 என்ற கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இப்போது அதிகரித்து வருகிறது.
புது வேரியண்ட்: கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காரகுளத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இந்த ஜேஎன்.1 கொரோனா கண்டறியப்பட்டது. 79 வயதான அந்த பெண்ணுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற பாதிப்பு இருந்துள்ளது. அப்போது அவருக்கு நடத்திய சோதனையில் தான் கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வேரியண்ட் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. புதிய கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆய்வாளர்கள் கவலையடைந்துள்ளனர், BA.2.86 அல்லது பைரோலா என்ற ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இந்த ஜேஎன் 1 வேரியண்ட் உருவாகியுள்ளது. கடந்த செப். மாதம் இந்த ஜேஎன் 1 வகை கொரோனா முதலில் அமெரிக்காவில் இது கண்டறியப்பட்டது. அதேபோல சீனாவிலும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 7 பேருக்கு இந்த வேரியண்ட் கண்டறியப்பட்டது.
என்ன மாற்றம்: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "பிஏ 2.86 மற்றும் ஜேஎன் 1 இரண்டும் பெயர் அளவில் வித்தியமாக இருந்தாலும், இரண்டிற்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடு தான். அதன் ஸ்பைக் புரதம் மட்டும் லேசாக மாறியிருக்கிறது" என்றார்.
கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்கள் மீதும் ஸ்பைக் புரதம் இருக்கும், இவை பார்க்க சிறிய கூர்முனைகளைப் போல இருப்பதால் இதை "ஸ்பைக்" என்று அழைப்பார்கள். எந்தவொரு வைரஸும் மனிதரைத் தாக்கும் போது, அவை நமது உடலில் இருக்கும் செல்ககளுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த இந்த ஸ்பைக் தான் பெரியளவில் உதவுகிறது.
புரத ஸ்பைக்: பெரும்பாலான வைரஸ்கள் இந்த புரத ஸ்பைக்கை தான் குறி வைக்கிறது என்பதால் இப்போது இருக்கும் கொரோனா வேக்சின் பிஏ 2.86 மற்றும் ஜேஎன் 1 என இரண்டு வகை கொரோனாவுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மூத்த மருத்துவர் பிரகாஷ் கூறுகையில், "இந்த வேரியண்டை கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். பீதி அடையத் தேவையில்லை என்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்றார். இப்போது இந்த ஜேஎன் 1 கொரோனா லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
அறிகுறிகள்: காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான மேல் சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை கொரோனா பாதிக்கப்பட்டோரின் உடல்நிலை 4, 5 நாட்களில் சரியாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து டாக்டர் பிரகாஷ் மேலும் கூறுகையில், "இந்த வகை கொரோனா குறித்து நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வகை கொரோனாவை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மற்ற கொரோனா வேரியண்ட்களின் அறிகுறிகள் தான் இதற்கும் இருக்கிறது.
பெரும்பாலான நபர்களுக்கு லேசான பாதிப்பே ஏற்படுகிறது. மிகச் சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது இருக்கும் சூழலை வைத்து அடுத்த கொரோனா அலை ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்ல முடியாது என்ற போதிலும், நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications