கட்சி தொடங்கி ஜஸ்ட் 10 ஆண்டுகளில் 2 மாநிலங்களில் ஆட்சி! அடுத்த பிரதமர் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி எம்எல்ஏ
டெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமராக பதவியேற்பார் என அக்கட்சியின் எம்.எல்.ஏவும் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளருமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இவர் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய சக்தி
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஆம் ஆத்மி கட்சி தேசிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி திகழ்ந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு மகத்தான நாளாகும். இன்று நாங்கள் தேசிய கட்சியாக மாறி இருக்கிறோம்.

இனி மாநில கட்சியில்லை
இனி நாங்கள் சாதாரண மாநில கட்சி அல்ல. கடவுள் எங்களையும் அர்விந்த் கெஜ்ரிவாலையும் ஆசீர்வதிக்க வேண்டும். ஒரு நாள் அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய நாட்டை ஆட்சி செய்வார். பாஜக இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. ஆனால், 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியோ அதைவிட குறைவான ஆண்டுகளில் 2 மாநிலங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது.

முன்மாதிரி கெஜ்ரிவால்
பஞ்சாப் மக்கள் அர்விந்த் கெஜ்ரிவாலை ஆட்சியாளர்களின் முன்மாதிரியாக கருதி வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மக்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தராமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த கட்சிகளை மக்கள் அதிகாரத்திலிருந்து தூக்கி எரிந்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்." என்றார்.

மதிப்பை உணர்கிறோம்
2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சத்தா, "இந்த வெற்றியின் அர்த்தத்தை நன்கு அறிவோம். இதன் மதிப்பை தற்போது உணர்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications