அசத்தல்.. மாத வருமானம் ரூ.10,000 வேணுமா? அடல் பென்ஷன் யோஜனா இருக்கே.. மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்
டெல்லி: ஓய்வு காலத்தில் கணவன், மனைவி இருவருமே பயன்பெற கூடிய வகையில் ரூ.10,000 மாத வருமானத்தை வழங்கக்கூடிய திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன் பலன்கள் என்னென்ன? இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் என்ன தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு எத்தனையோ வசதிகளையும், சலுகைகளையும் அறிமுகம் செய்து வருகிறது.. அதில் மிக முக்கியமானதும், அத்தியாவசியமானதும் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.

சிறுசேமிப்பு: இந்த சிறுசேமிப்பு திட்டங்களை பொதுமக்கள் அதிகம் நாடி வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த திட்டங்கள் பாதுகாப்பானவை.. அதிக வட்டி அளிக்ககூடியவை.. அரசு அங்கீகாரம் இருப்பதால், சேமிப்பும் பாதுகாப்பானவை..
அந்தவகையில், ஓய்வூதியதாரர்களுக்காகவே கொண்டுவந்துள்ள திட்டம்தான், அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும்.. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள்.. இந்த திட்டமானது, வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானமும் தரக்கூடியது..
பென்ஷன்: அந்தவகையில், ஓய்வூதிய தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என்பது போலவும் பென்ஷன் கிடைக்கும் வகையில் திட்டங்களும் இதில் உள்ளன..
அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும்.
வருமானம்: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களும் ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 8 சதவீத வருமானம் வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் பலனை 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே பெற இயலும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மாதத்திற்கு ரூ.210 வீதம் 18 வருடங்கள் செலுத்தினால் ஓய்வுக்கு பிறகு ரூ.5000 மாத வருமானமாக பெறலாம்.
இத்தகைய திட்டத்தில் கணவன், மனைவி இருவருமே இணைத்து கொள்ளலாம். இப்படி இருவருமே இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ரூ.10,000 வரை வருமானம் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பயனர்கள் 60 வயது பூர்த்தி அடைந்த பின்பே பெற இயலும்.
பென்ஷன் தொகை: ஏதேனும் காரணத்தினால் சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்... ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.. சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும்போது மட்டுமே இந்த அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் இந்த சந்தாதாரர் பெற முடியும்...
60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. ஆனால், சில விதிவிலக்குகள் உண்டு.. உதாரணமாக, சந்தாதாரர் இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருத்தல் போன்ற அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கே ஆரம்பிக்கலாம்: அடல் பென்ஷன் திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்கலாம்.. பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளைக்கு 100க்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்டகணக்குகள் உள்ளன. ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை உங்களிடம் ஆவணங்களாக கேட்கப்படும்..
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications