இன்று 76ஆவது சுதந்திர தினம்.. வாகாவில் வீறு நடைபோட்ட வீரர்கள்! கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகம் அளப்பரியது.
தங்கள் இன்னுயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்கள் செய்த தியாகமே நாம் இன்று சுதந்திர காற்றைச் சுவாசிக்கக் காரணமாக உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது

76ஆவது சுதந்திர தின விழா
இன்று நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை அவர்களின் மாநிலங்களில் ஏற்றினர்.

வாகா எல்லை
இதனிடையே மாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் அங்குத் திரண்டு இருந்தனர். ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அங்கு பெரும் திரளாகக் கூடி இருந்தனர். கொரோனா பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டனர்.

பார்வையாளர்கள்
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இந்த நிகழ்வு 1959ஆம் ஆண்டு முதல் தினசரி நடந்து வருகிறது. இந்த நிகழ்வைக் காண இந்தியா பாகிஸ்தான் என இரு புறமும் பார்வையாளர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய எல்லையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நிகழ்வைக் காணத் திரண்டு இருந்தனர். திரண்டு இருந்த பொதுமக்கள் "இந்தியா ஜிந்தாபாத்" என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர்.

என்ன நடக்கும்
இந்த நிகழ்வில் இந்திய வீரர்கள் சிவப்பு தொப்பிகள் மற்றும் காக்கி உடை அணிந்து இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு உடை அணிந்து இருந்தனர். மாலை நேரத்தில் எல்லை கதவுகள் திறக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் சில அடி தூரத்தில் நின்று மார்ச் பாஸ்ட் செய்வார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வு கொடிகள் இறக்கப்பட்டதும் முடிவடையும். கொடிகள் மடிக்கப்பட்ட பின்னர், எல்லையில் உள்ள பெரிய இரும்புக் கதவுகள் மூடப்படும்.