எல்லாம் ஓகே.. கடைசி நேரத்தில் பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி.. பீகார் தரப்போகும் ட்விஸ்ட்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த முறை பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனப் பெரும்பாலான எக்ஸிட் போல்களில் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த கால பீகார் தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படுகிறது. இது என்டிஏ கூட்டணிக்கான ஒரு எச்சரிக்கையாகவே இருக்கிறது. அப்படி பீகார் தேர்தல் வரலாறு சொல்வது என்ன.. அங்கு என்ன மாதிரியான மாற்றம் நடக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்!
பீகாரில் இப்போது இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த நவம்பர் 6ம் தேதி முதற்கட்டத் தேர்தல் 121 தொகுதிகளில் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இரு கட்டங்களிலும் அங்குப் பெரும்பாலான தொகுதிகளில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்தது.

என்டிஏ வெல்லும்
இதற்கிடையே பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே அங்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது. அதில் கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல்களிலும் ஆளும் என்டிஏ ஆட்சியைத் தக்கவைக்கும் என்றே தெரிவிக்கின்றன. அதிலும் சில கணிப்புகள், பீகாரிலுள்ள 243 தொகுதிகளில் 150 முதல் 170 இடங்களில் என்டிஏ வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
இது ஆளும் என்டிஏ கூட்டணிக்கு நல்ல செய்தி தான் என்றாலும் கூட வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. என்டிஏ கூட்டணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த முறை பீகாரில் இதுவரை இல்லாத அளவுக்கு 66.91% வாக்குப்பதிவு பதிவானது. பீகார் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். அங்கு முதல் கட்டத் தேர்தலில் 65.08% வாக்குகளும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 68.76% வாக்குகளும் பதிவானது.
கவனிக்க வேண்டியது
2020 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வாக்குப்பதிவு 9.62% வரை அதிகரித்துள்ளது. 2020ல் 57.29% மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.. இதில் பாஜகவுக்கு எச்சிக்கை என்னவென்றால்.. கடந்த காலங்களில் எப்போதெல்லாம் பீகாரில் வாக்குப்பதிவு ஐந்து சதவீதத்திற்கு மேல் அதிகரித்ததோ.. அப்போதெல்லாம் அங்கு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த காலங்கள்
1962ம் ஆண்டு பீகாரில் 44.5% வாக்குகள் பதிவானது. 1967ல் அது 7% அதிகரித்து 51.5%ஆக பதிவானது.. அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன. அதேபோல, 1980 தேர்தலில், 1977ல் பதிவான 50.5%ஐ விட 6.8% அதிகமாக, அதாவது 57.3% வாக்குகள் பதிவானது. அந்த 1980 தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
1990ல் மூன்றாவது முறையாக இதே நிகழ்வு ஏற்பட்டது. 1985 (56.3% வாக்குப்பதிவு) தேர்தலைக் காட்டிலும், 1990ல் 5.7% கூடுதலாக 62% வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தது. அப்படி அங்கு எப்போதெல்லாம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் 5%க்கு மேல் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதோ.. அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இந்த முறை 9.6% வாக்குப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், அதேபோல ஆட்சி மாற்றம் நடக்குமா என்பதை நாளைய தினம் தான் பார்க்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள்
பீகார் தேர்தலில் இந்த முறை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பீகாரின் 243 தொகுதிகளிலும் மொத்த வாக்காளர் பதிவு 66.9% ஆக இருந்தது. இதில் ஆண்கள் 62.8% பேரும், பெண்கள் 71.6% பேரும் வாக்களித்துள்ளனர்.
பீகாரில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளைய தினம் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் நிலையில், பகல் 11 மணியளவில் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்ற டிரெண்ட் தெரிந்துவிடும்!
-
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications