மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு! அத்துமீறிய போலீஸ்.. நீட் போராட்டத்தில் உச்சக்கட்ட பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் முறைகேடு விவகாரத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் போராட்டத்தின் போது,மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கியால் சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து, டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் மெல்ல நாடு முழுக்க பரவியது. அதன்படி கடந்த ஜூலை 25ம் தேதி பல்வேறு மாணவர் அமைப்புகள் பீகார் முழுவதும் பீகார் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டன. மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலை மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் கடும் மோதலும் ஏற்பட்டது.

ak47 neet neet protest police

ஏகே 47 துப்பாக்கி

அதில், சிவான் மாவட்டத்தில் நடந்த சம்பவம்தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் போராடும் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்டுள்ளார். குறைந்தது மூன்று முறை அந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். போராடும் மாணவர்கள் மீது ஏதோ தீவிரவாதிகளை போல ஏகே 47 துப்பாக்கி பயன்படுத்தப்படுவதை ஏற்கவே முடியாது என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பீகார் போலீஸ், அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிகிறது. அவர்கள் பாட்னாவில் உள்ள ஜெயப்பிரபா மெடாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 வயது சிறுவன்

இந்த துப்பாக்கி சூட்டில் வெறும் 15 வயதே ஆன சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளார். அந்த சிறுவன் அருகிலுள்ள கடையில் வேலை செய்து வந்ததாகவும், பந்த் காரணமாக கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கழுத்தில் குண்டு பாய்ந்ததாகவும் சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடும் விமர்சனம்

மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசை விமர்சித்தார். டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், பீகாரில் AK-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், "மாணவர் போராட்டங்களை ஒடுக்க பாஜக எல்லா இடங்களிலும் ஒரே முறையை பயன்படுத்துகிறது" என்று விமர்சித்தார்.

விளக்கம்

இது தொடர்பாக பீகார் போலீசார் கூறுகையில், "சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது முக்கிய பொறுப்பு என்றாலும் போலீசார் விதிமுறைகளை மீறக்கூடாது. சம்பந்தப்பட்ட காவலர் துப்பாக்கியை பயன்படுத்தியது போலீஸ் நடைமுறைகளுக்கு உட்பட்டதா அல்லது ஏதேனும் விதிமீறல் நடந்ததா என்பது குறித்து துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+