ஒரே ஆண்டில் பாஜக வருமானம் 50% அதிகரித்துள்ளது.. உங்கள் வருமானம் என்ன ஆனது? ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: தேர்தல் பாண்டுகள் மூலம் கடந்த ஆண்டு பாஜக பெற்ற நன்கொடை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், "பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது, உங்கள் வருமானம் என்ன ஆனது?" எனக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். இந்தியாவில் பல்வேறு முறைகளில் ஒரு கட்சிக்கு நன்கொடை அளிக்க முடியும்.
அப்படித் தேர்தல் பத்திரங்கள் எனப்படும் தேர்தல் பாண்டுகள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல்கள் வெளியானது.

பாஜகவுக்கு கிடைத்த நன்கொடை
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பாஜக 2410.8 கோடி ரூபாயை நன்கொடையாகத் தேர்தல் பாண்டுகள் மூலம் பெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டது. 2019-20ஆம் நிதியாண்டில் தேர்தல் பாண்டுகள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை 3623.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது தேர்தல் பாண்டுகள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 50% (1213.20 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது).

ராகுல் காந்தி கேள்வி
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இது பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "பாஜகவின் ஆண்டு வருமானம் 50% அதிகரித்துள்ளது. உங்கள் வருமானம் என்ன ஆனது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ்
இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடை 25.69% குறைந்துள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் 918 கோடி ரூபாயைத் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்ற நிலையில், இது 2019-20ஆம் நிதியாண்டில் ரூ 682 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பாண்டுகள் மூலம் கிடைத்த நன்கொடை ஒரே ஆண்டில் 235 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

மாநில கட்சிகள்
அதேபோல மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல்களும் வெளியானது. கடந்த 2018-19இல் 50 கோடி ரூபாயைத் தேசியவாத காங்கிரஸ் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்ற நிலையில், இது 2019-20ஆம் நிதியாண்டில் 85.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளுக்குத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகள் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications