டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3வது தடுப்பூசியா?.. பூஸ்டர் டோஸ் இப்போது நமக்கு தேவையா?.. ஐ.சி.எம்.ஆர் தந்த விளக்கம் என்ன?..!

பூஸ்டர் டோஸ்கள் நமக்கு இப்போது தேவையா என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்

Google Oneindia Tamil News

டெல்லி: தற்போதைக்கு வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசின் முழுக்கவனம் இருக்கிறது என்றும் பூஸ்டர் டோஸ் என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல என்றும் ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்ட அதிபர் ஜோ பைடன்… கொரோனா தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா தீவிரம்!

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது... ஆனால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த 2 டோஸ்கள் கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார் தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

    இதனால் கூடுதலாக 3வது டோஸ் அதாவது பூஸ்டர் செலுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்... அந்த வகையில், ஐசிஎம்ஆர் என்று சொல்லப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பல்ராம் பார்கவா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அப்போது அவர் சொன்னதாவது: "கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்து வருகிறது.. தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும், வெளியூர் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.. பண்டிகை காலங்களில் பொறுப்புடனும், தொற்று பரவாமல் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்..

    கூட்டம்

    கூட்டம்

    இனிமேல் அடுத்தடுத்து நிறைய பண்டிகைகள் வர உள்ளது.. அதனால் முடிந்தவரை கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.. மக்கள் நெரிசல் எங்குள்ளதோ, அங்கு வைரஸ் எளிதாக பரவக்கூடும்...வரப்போகும் 3 மாதங்களில் மட்டும் மக்கள் கவனமாக இருந்தால் போதும்.. தடுப்பூசிகள் போடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது... ஆனால், பூஸ்டர் தடுப்பூசி குறித்து அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதாரத்துறையிலும் இதுவரை எந்தவித ஆலோசனையும் செய்யப்படவில்லை.. 2 தடுப்பூசிகளை போடுவதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது" என்றார்.

    ஐசிஎம்ஆர்

    ஐசிஎம்ஆர்

    இதே கருத்தில்தான் தற்போதும் ஐசிஎம்ஆர் உறுதியாக உள்ளது.. இந்தியாவில் கொரோனா தடுப்பு முயற்சியாக 2 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே ஒரு கருத்து எழுந்துள்ளது...தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.

    முன்னுரிமை

    முன்னுரிமை

    அதனால், இந்தியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி தேவையா, தேவையில்லையா என்ற விவாதம் எழுந்தபடியே உள்ளது.. அதேசமயம் சைடஸ் பூஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் 12 - 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பிற நாடுகளில் பூஸ்டர் செலுத்தி கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் மின்னூட்டங்களை பொறுத்து இந்தியாவிலும் பூஸ்டர் ஊசி அமலுக்கு வரக்கூடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்..

     2வது தடுப்பூசி

    2வது தடுப்பூசி

    இந்நிலையில்தான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா சொல்லும்போது, "பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இல்லை... அதனால், பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை. இப்போது தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக போடுவதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்... இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒரு சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Booster: Focus is to fully vaccinate adult population booster, says ICMR
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X