டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் கூட்டத்தொடர் 2022.. காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் நாடாளுமன்றம்.. காரணம் இது தான்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் ஜன. 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஜன.31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து, பிப். 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget session Different timings for Lok Sabha, Rajya Sabha amid Covid

இந்தச் சூழ்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப். 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பின்னர் பிப். 2 முதல் பிப்ரவரி 11 வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் மாநிலங்களவை காலை 9 முதல் 2 மணி வரையும் தனித்தனியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆனால் இரண்டாம் அமர்வுக்கான நேரக்கட்டுப்பாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சுநம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

Recommended Video

    Raghuram Rajans Key Things For Union Budget 2022 | Oneindia Tamil

    முன்னதாக கடந்த 2021 பட்ஜெட் கூட்டத்தொடர் சமயத்திலும் கொரோனா வழிகாட்டுதல்களின்படி இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha and Rajya Sabha will meet at separate times during the Budget Session beginning January 31. First part of the session starts on February 2 and ends February 11.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X