இந்தியாவில் கலீபா ஆட்சி.. ஆப்கனில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்- வெளியான பரபரப்பு தகவல்கள்
டெல்லி: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தீவிரவாத அமைப்பினர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அமைப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்தியாவிற்கு வர திட்டம்
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ISIS-K, "ஜிஹாத்தை மத்திய ஆசியாவிற்கும் பின்னர் இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்யும்" என்று நம்புகிறது என்கிறார். பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதும், இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் அவர்களின் திட்டமாக உள்ளன.

கலீபா ஆட்சி
மேலும் அந்த அதிகாரி கூறுகையில், "கருத்தியல் ரீதியாக, அவர்கள் கலிபாவின் ஆட்சியை நிறுவ விரும்புகிறார்கள், இந்தியா அதில் சேர்க்கப்பட்டுள்ளது. காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் - கே அந்த உற்சாகத்தில், இந்தியாவிலும் தீவிரவாதிகளை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ தேவைப்படும் முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நபிகள் நாயகத்தின் மறைவிற்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியை நேர்வழியில் நின்று நடத்தியவர்களே கலீபாக்கள்.

இந்தியாவில் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சில நாட்களில், பாகிஸ்தான் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், ஆப்கானிஸ்தானின் கந்தகருக்கு சென்றுள்ளதாகவும், அங்குள்ள தலிபான் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

தாலிபான்கள்
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தாலிபான்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தாலிபான்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிபான்களின் ஆப்கன், தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளதை உணர்ந்துதான் உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications