மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டம், ஜூன் 17ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்தக்கூட்டத்தில், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆணையத்துக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு, இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழக அரசு, மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
கடந்த ஜூன் 7 ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், "மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என உத்தரவு இருந்தும் அது மீறப்படுகிறது. கர்நாடகா சார்பில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகளையொட்டி, ஜூன் 17, ஜூன் 23 மற்றும் ஜூலை 6ஆம் தேதி என 3 முறை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் கூட்டம்
இந்நிலையில், மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16ஆவது கூட்டம், வரும் 22ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் ஆணையத்தின் செயலா் திரு. வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் துரைமுருகன்
இதற்கிடையே, மேகதாது அணை குறித்து, மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

நல்ல தீர்ப்பு கிடைக்கும்
இதற்காக டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமனறத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வரவிருப்பதாக தெரிவித்தார். அது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும். தங்களுடைய வாதத்தில் நியாயம் இருப்பதால் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநடப்பு செய்வோம்
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதப் பொருளாக வைக்கப்பட்டிருந்தாலும், கூடுமான வரையில் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார். தங்கள் எதிர்ப்பை மீறி மேகதாது குறித்து விவாதித்தால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் பங்கீடு செய்யவில்லை என தமிழக அரசு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா அரசு தரப்பின் சார்பில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒத்தி வைப்பு
மேகதாது பற்றி விவாதிக்கலாமா வேண்டாமா என்று காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் இருந்து பிரச்சினை இருக்கிறது. வழக்கை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறி வரும் செவ்வாய்கிழமைக்கு நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர். காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications