டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் நாளே அதிரடி காட்டிய சிபிஐ இயக்குனர்.. அதிர்ந்த மத்திய அரசு.. விளைவு டிஸ்மிஸ்

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு திரும்பிய முதல் நாளே அதிரடியாக பழைய பணியிட மாற்றங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு திரும்பிய முதல் நாளே அதிரடியாக பழைய பணியிட மாற்றங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் நேற்று முதல்நாள்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கினார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் இருந் சமயத்தில் நாகேஸ்வர் ராவ் சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்பட்டார். இவர் பதவியேற்ற முதல் நாளே ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முக்கியமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரித்த பலர் மாற்றம் செய்யப்பட்டனர்.

யார் யார்

யார் யார்

சிபிஐ அதிகாரிகள் ஏகே பாஸி, அஜய் பாஸி, எஸ்எஸ் கும், ஜபால்பூர், மனிஷ் குமார் சின்ஹா, தருண், ஜஸ்பீர் சிங், அனிஷ் பிரசாத், கே ஆர் சவுராஷியா, ராம் கோபால், சதிஷ் தாகர் ஆகிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மிக முக்கியமான அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்து

ரத்து

இந்த நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு திரும்பிய முதல் நாளே அதிரடியாக பழைய பணியிட மாற்றங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 13 பேரின் பணியிட மாற்றங்களையும் அலோக் வெர்மா ரத்து செய்துள்ளார். இதனால் இவர்கள் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் பணிக்கு சேர்கிறார்கள்.

என்ன முடிவு

என்ன முடிவு

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா, தேர்வு கமிட்டி அறிக்கை அளிக்கும் வரை கொள்கை முடிவு எடுக்க கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் பணியிட மாற்றம் என்பது கொள்கை முடிவு கிடையாது. முக்கிய அதிகாரிகள் மீண்டும் பணிக்கு வந்திருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
CBI Director Alok Verma Strikes Back: He cancels most Transfers ordered by Interim CBI Chief M Nageshwar Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X