டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தேதி -இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது..!

Google Oneindia Tamil News

டெல்லி: சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்பே மத்திய பாடத்திட்ட தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் தாக்கம் காரணமாக தேர்வு நடத்தும் முறைகளில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

CBSE exam date will be announced this evening

கொரோனா காரணமாக இந்த கல்வியாண்டு கடும் சவால்களை சந்தித்துள்ளது. மாணவர்கள் நேரடியாக கல்வி கற்காமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள். கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.

இதனிடையே அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Tnpsc தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு... உங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இது தான்..!Tnpsc தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு... உங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இது தான்..!

தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பினருடன் நடத்தப்பட்ட பல கட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக் கேட்புக்கு பிறகு தேர்வு தேதியை அறிவிக்க உள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட தேர்வு தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

இதனால் தேர்வு தேதியை அறிந்து கொள்ள நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆவலுடன் உள்ளனர்.

English summary
CBSE exam date will be announced this evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X