டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ வினாத்தாள்.. பாலின பாகுபாடு! பெண்கள் மீதான பாஜகவின் பிற்போக்குத்தனம்.. கொதிக்கும் பிரியங்கா

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பது தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜக அரசின் பிற்போக்குத்தனம் என உ.பி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன் தினம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அந்த கேள்வித்தாளில் பிரிவு ஏவில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் இல்வாழ்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது. முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை.

இதுதான் நேரம்.. தமிழ்நாடு அரசு சுதாரிக்க வேண்டும்.. சுற்றிவளைத்த ஓமிக்ரான்.. மீண்டும் லாக்டவுன்? இதுதான் நேரம்.. தமிழ்நாடு அரசு சுதாரிக்க வேண்டும்.. சுற்றிவளைத்த ஓமிக்ரான்.. மீண்டும் லாக்டவுன்?

வீட்டு பணியாளர்கள்

வீட்டு பணியாளர்கள்

இதனால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுகுறிப்பிற்கு ஒரு தலைப்பை இடுமாறும் ஒரு மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யார் காரணம்

யார் காரணம்

குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட் என்ன காரணம், வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என கேட்கப்பட்டுள்ளது. இதை பலர் கண்டித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோம் என கேள்வி எழுப்புகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமாக கருத்துகளை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பதை தெள்ள தெளிவாகிறது.

கேள்வி

கேள்வி

இதை ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வைத்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமசந்திரன் கூறுகையில் கொஞ்சம் கூட முட்டாள்தனமான ஒரு சிறுகுறிப்பை சிபிஎஸ்இ தேர்வில் வைத்தது யார்?

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு

இதற்கு சிபிஎஸ்இ வாரியம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒட்டுமொத்த சிறுக்குறிப்புமே முட்டாள்தனமாக உள்ளது. எந்த முட்டாள்கள் இது போன்ற கேள்வித்தாளை தயார் செய்தது? இது பாலின பாகுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அது போல் குடும்பங்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்தை ஆதரிப்பதாகவே உள்ளது என்றார்.

கரூர் எம்பி

கரூர் எம்பி

அது போல் இந்த சம்பவம் குறித்து கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை உமிழும் இத்தகைய கேள்விகளை சிபிஎஸ்இ வாரியம் திரும்ப பெற வேண்டும். இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னிறுத்திய பாலின வாதங்களுக்கு எதிரானதாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
CBSE 10th exam paper has sparked a controversy for gender stereotype.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X