டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

12 ஆயிரத்துக்கு சீன போன்! திவாலாகும் இந்திய கம்பெனிகள்? தடை போட முடிவெடுத்த மத்திய அரசு? பரபர தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி : சீன செல்போன் நிறுவனங்களின் ஆதிக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் 12 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் உள்ள சீன செல்போன் நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நவீன யுகத்தில் செல்போன்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள நிலையில் குடும்பத்திலுள்ள அனைவருமே இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெரும்பகுதியை செல்போன்களில் உள்ள சமூக வலைதளங்களை கழித்து வருகின்றனர்.

காலையில் அலாரம் வைத்து எழுவதிலிருந்து இரவு யூட்யூபில் தாலாட்டு வரை செல்போன்கள் இல்லாமல் ஒரு நாளைக் கூட பலரால் கழிக்க முடியாது என்பதை நிதர்சனம் அந்த அளவுக்கு கைகளில் ரேகை போல ஒட்டிக் கொண்டிருக்கிறது.

தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம்; அடுத்து என்ன நடக்கும்? தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம்; அடுத்து என்ன நடக்கும்?

செல்போன்கள்

செல்போன்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து பல லட்சங்கள் வரை செல்போன்களை வாங்க முடியும் என்றாலும் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தினர் விலை குறைவான செல்போன்களே பயன்படுத்தி வருகின்றனர். 8000 முதல் 15,000 ரூபாய் வரையிலான செல்போன்களை வாங்குவதற்கு நடுத்தர குடும்பத்தினரும் குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். செல்போன் கேமரா, யூடியுப், பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் கேமிங் வசதிகளுக்காக குறைந்த விலையில் ரெட்மி உள்ளிட்ட ஃபோன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

சீன செல்போன்கள் ஆதிக்கம்

சீன செல்போன்கள் ஆதிக்கம்

உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் செல்போன் விற்பனையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பது அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத ஃபோன்கள் சீன நிறுவனங்களின் போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜியோமி நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்றி இருக்கும் மிகப்பெரிய சீன நிறுவனமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக பிபிக்யூ நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக தான் oneplus, oppo, realme,vivo ஆகிய போன்கள் விற்கப்படுகின்றன.

இந்திய நிறுவங்கள்

இந்திய நிறுவங்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை 27 சதவீதம் ஜியோமி போன்களும், 16 சதவீதம் விவோ ஃபோன்களும், 13 சதவீதம் ரியல்மீ ஃபோன்களும், 11 சதவீதம் ஓப்போ போன்களும் விற்பனையாகின்றன. இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலத்த இழப்பௌ சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சீன செல்போன்களுக்கு தடை

சீன செல்போன்களுக்கு தடை

மிகக் குறைவான விலையில் அதிநவீன வசதிகளை சீன செல்ஃபோன்கள் வழங்குவதால் இந்தியர்கள் அதனை அதிகமாக பயன்படுத்துவதாக தகவல் வெளியான நிலையில் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 12000 ரூபாய் விலைக்கு குறைவான உள்ள சீன ஃபோன்களை தடை செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையா ஜியோமி உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்திப்பதோடு இந்தியாவில் சந்தை சுருங்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் டிக் டாக், பப்ஜி உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

English summary
It has been reported that the central government has decided to ban Chinese mobile phone companies below the price of 12 thousand rupees while Indian companies are facing a sharp decline due to the dominance of Chinese mobile phone companies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X