எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் & துணை ஜெனரல் நீக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை! என்ன காரணம்?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் எல்லையை பிஎஸ்எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை தான் பாதுகாத்து வருகிறது. இதற்கிடையே இந்த படையினர் இயக்குநர் ஜெனரல் பொறுப்பில் இருந்த நிதின் அகர்வாலை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் துணை சிறப்பு டிஜி (மேற்கு) பொறுப்பில் இருந்த ஒய்.பி. குரானியாவும் நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாக இந்தியா பாகிஸ்தான் எல்லை கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து தொடர்ச்சியாக ஊடுருவல் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்தளவுக்கு முக்கியமான எல்லையை பிஎஸ்எஃப் எனப்படும் இந்த எல்லைப் பாதுகாப்புப் படை தான் கண்காணித்துப் பாதுகாத்து வருகிறது. இந்தச் சூழலில் சமீப காலமாகவே பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன.
மத்திய அரசு நடவடிக்கை: இதற்கிடையே மத்திய அரசு திடீர் நடவடிக்கையாக பிஎஸ்எஃப் எனப்படும் இந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வாலை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், துணை சிறப்பு டிஜி (மேற்கு) பொறுப்பில் இருந்த ஒய்.பி. குரானியாவும் நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவர்கள், மீண்டும் மாநிலப் கேடர்களுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய அரசு எதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம்.. இனி எதிரிகளால் வாலாட்டவே முடியாது.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!
யார் இவர்கள்: எல்லை பாதுகாப்பா படையின் இயக்குநர் ஜெனரலாக இருந்த நிதின் அகர்வால் 1989ம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் அதிகாரி ஆவார். அதேபோல சிறப்பு டிஜி பொறுப்பில் இருந்த ஒய்.பி. குரானியா 1990ம் ஆண்டு ஒடிசா கேடரைச் சேர்ந்தவர். இதில் நிதின் அகர்வால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எல்லை பாதுகாப்புப் படைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மேற்கு மண்டலத்தில் சிறப்பு டிஜியாக இருந்த பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படைகளைக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் தான் அவர்கள் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இரு தனித்தனி உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: அவர்கள் ஏன் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் கூட சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதன் காரணமாகவே அவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்படுவது என பிஎஸ்எஃப் தலைவர் மீது புகார்கள் வந்திருந்த நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எல்லை பாதுகாப்புப் படை: சுமார் 2.65 லட்சம் வீரர்களைக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படை தான் மேற்கில் பாகிஸ்தான் எல்லையையும் கிழக்கில் வங்கதேச எல்லையையும் பாதுகாத்து வருகிறது. இந்த எல்லைப் பாதுகாப்புப் படை என்பது மத்திய ஆயுதக் காவல் படையின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு ஆகும். 1965ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இது உருவாக்கப்பட்டது. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
-
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications