டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வடிவமைக்க இன்னும் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (என்.டி.எம்.ஏ) இது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு வழங்குமாறு வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால் மற்றும் கௌரவ் குமார் பன்சால் ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் உறவினர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உயிர் இழப்புக்கான நிதி உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பொருத்தமான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ம் தேதி அளித்த தீர்ப்பில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு ( NDMA) உத்தரவிட்டது.

4 வாரம்

4 வாரம்

இந்நிலையில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில். இது தொடர்பாக கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வடிவமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது. கொஞ்சம் தீவிரமான பரிசீலனைகள் நடந்து வருகிறது. பரிசீலனைக்கு பின் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்றும். எனவே இன்னும் 4 வாரங்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சான்றிதழ்கள் வழிமுறை

சான்றிதழ்கள் வழிமுறை

முன்னதாக ஜூன் 30 ம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், "இறப்புச் சான்றிதழ்கள் / உத்தியோகபூர்வ ஆவணங்கள் இறப்புக்கான சரியான காரணத்தைக் குறிப்பிடும், அதாவது அரசின் நலத்திட்ட உதவிகளை பெற " கோவிட் -19 காரணமாக மரணம் " என்று சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தது

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

எனினும் உச்சநீதிமன்றம் ரூ .4 லட்சத்தை கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று கூறியது. எவ்வளவு தொகை என்பதை நிதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் 30ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், "கோவிட் -19 காரணமாக இறந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயிர் இழப்பு காரணமாக நிவாரண உதவிக்கான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்குமாறு நாங்கள் என்.டி.எம்.ஏ-க்கு அறிவுறுத்துகிறோம்,. இது பேரிடர் மேலாண்மை சட்டம் (டி.எம்.ஏ) 2005 இன் பிரிவு 12 (iii) இன் கீழ் பேரழிவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிவாரணத்தை தர வேண்டும். கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிவாரணத் தரங்களுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது,

உத்தரவு

உத்தரவு

கோவிட் காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பான நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்தும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

English summary
the Centre has moved the Supreme Court seeking extension of time granted by the apex court to NDMA to frame guidelines for the ex-gratia compensation to families of those who died of COVID-19 by another four weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X