லடாக் பகுதியில் மீண்டும் சித்து விளையாட்டை தொடங்கும் சீனா .. ராணுவ தலைமை தளபதி பகீர் தகவல்!
டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

கடும் மோதல்
சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

உள்கட்டமைப்பை உருவாக்குகிறது
இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்தனர். இந்த நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார்.
Recommended Video

வலிமையானவர்கள்
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எம்.எம்.நரவானே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கிழக்கு லடாக் பகுதியில் அதிக துருப்புக்களை அனுப்ப அதன் பக்கத்தில் சீனா நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. நாம் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கும்படி கண்காணித்து வருகிறோம். மேம்பட்ட ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நமது படை வீரர்கள் வலிமையானவர்கள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

பேச்சுவார்த்தைகள்
சீனாவுடன் எல்லா நிலைகளிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, இதுவரை 12 சுற்றுகள் நடந்துள்ளன. 13-வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெப்சாங் மற்றும் டெம்சோக் போன்ற பிற பகுதிகளில் இரு நாட்டு படைகள் திரும்ப பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் அத்துமீறல்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறல் குறித்து அவர் கூறுகையில், ' கடந்த இரண்டு மாதங்களிலிருந்து, காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி செய்யப்பட்டது, அதை நாங்கள் முறியடித்தோம். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியாமல் இந்த ஊடுருவல் சாத்தியமில்லை' என்று அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications