சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!
டெல்லி: சீனாவின் பிளான் 2049 என்ற மாஸ்டர் திட்டம் ஒன்றை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருவதுதான் சீனாவின் திடீர் அத்துமீறலுக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
இந்தியா சீனா இடையிலான லடாக் பிரச்சனை உலக அளவில் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சண்டையை கவனிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்டு சண்டை குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆலோசகர் சக்தி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் இன்ஸ்டிடியூட் ஆப் பாலிசி ரிசர்ச் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ், எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது இயக்குனராக இருக்கும் இவர் இரண்டு நாட்டு பிரச்னையை தீவிரமாக கவனித்து வருகிறார். இரண்டு நாட்டு எல்லையில் என்ன நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.

என்ன காரணம்
சீனாவின் இந்த திடீர் தாக்குதல் மற்றும் மோதலுக்கு என்ன காரணம் என்று அவர் விளக்கி உள்ளார். அதில், எல்லையில் பல வருடங்களாக சீனா தொடர்ந்து அத்துமீற திட்டமிட்டு வருகிறது. அதிலும் கடந்த 10 வருடங்களாக சீனா மிகவும் தீவிரமாக தொடங்கி உள்ளது. சீனா உலகில் மிகப்பெரிய நாடாக உருவெடுக்க முடிவு செய்துள்ளது. உலகை கட்டுப்படுத்தும் நாடாக சீனா விரிவடைய திட்டமிட்டுள்ளது.

என்ன பிளான்
அதிலும் சீனா வரும் 2049ம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. அப்போது சீனா உலகின் ராஜ்ஜியங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது. அதிலும் இந்தியாவில் இருக்கும் லடாக் போன்ற முக்கியமான இடங்களை சீனா தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. சீனா அந்த விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாட இப்போதே திட்டமிட்டு வருகிறது.

பிளான் 2049
அந்த விழாவை கொண்டாடும் போது நிலப்பரப்பு ரீதியாக பெரிய நாடாக வளர்ந்து, பொருளாதார ரீதியாக உலகின் முதல் நாடாக உயர்ந்து, இந்தியா உட்பட உலக நாடுகளை கட்டுப்படுத்துவதே சீனாவின் நோக்கமாக இருக்கிறது. சீனாவின் இந்த திட்டத்திற்கு அமெரிக்காவை விட இந்தியாதான் பெரிய தடங்கலாக இருக்கிறது. சீனாவின் பிளான் 2049 க்கு இந்தியா மட்டுமே தடங்கலாக இருக்கிறது.

உலகம் முழுக்க செயல்படவும்
முக்கியமாக உலகம் முழுக்க இருக்கும் 70 நாடுகளை இணைக்கும் வகையில் சீனா Belt and Road Initiative என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் உலகம் முழுக்க 70 நாடுகளை பல்வேறு சாலைகள், கடல் போக்குவரத்து மூலம் சீனா இணைக்கும். அங்கு முதலீடுகளை செய்து, கட்டுமானங்களை எழுப்பி சீனா அந்த நாடுகளை மொத்தமாக கட்டுப்படுத்தும். சீனாவின் மிகப்பெரிய திட்டம் ஆகும் இது.

இந்தியா எதிர்ப்பு
ஆனால் சீனாவின் இந்த மாஸ் திட்டத்திற்கு இந்தியா தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 2049ல் சீனா நிறைவேற்ற போகும் பிளானுக்கு அடித்தளமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த திட்டத்தையே இந்தியா கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. அதோடு சீனாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் இந்தியா எல்லையில் சாலைகளை அமைத்து வருகிறது. லடாக் எல்லையில் இந்தியா கட்டுமானங்களை நிகழ்த்தி வருகிறது.

சீனாவின் அச்சம்
லடாக் தொடங்கி அருணாசலப்பிரதேசம் வரை இந்தியா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு முழுக்க முழுக்க சாலைகளை அமைத்து உள்ளது. லடாக்கை கைப்பற்றும் சீனாவின் பிளானுக்கு இது தடங்கலாக மாறியுள்ளது. அதேபோல் இந்தியா பொருளாதார ரீதியாக சீனாவை கட்டுபடுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை விட இந்தியா மீது அதிக ஆர்வம் காட்டுகிறது.

பிக்பாஸ் பிளான் என்ன
சீனாவின் பிக்பாஸ் பிளான் இதனால் சுக்குநூறாக உடைய தொடங்கி உள்ளது. இதனால்தான் தற்போது சீனா எல்லையில் படைகளை குவித்து தாக்குதல் நடத்துகிறது. இந்தியா எப்போது எழுச்சி பெற்றாலும் அப்போது சீனா தாக்குவதே வழக்கம். 1962ல் கூட சீனா இந்தியாவை இதனால்தான் தாக்கியது. தற்போது அதே பார்முலாவை பயன்படுத்தி இந்தியாவை சீனா தாக்கி வருகிறது, என்று சக்தி சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications