டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கவில்லை.. ஏமாற்றத்தில் மக்கள்.. அதிர வைத்த சி வோட்டர் சர்வே!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் சண்டையில் சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கவில்லை, ஆனால் பிரதமர் மோடி இதில் சரியாக பதிலடி கொடுப்பார் என்று சி வோட்டர் சர்வேயில் மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியா - சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை.

கடந்த மே 5ம் தேதி சிறிய மோதலாக தொடங்கிய சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

லடாக் தாக்குதலுக்கு அவர்தான் லடாக் தாக்குதலுக்கு அவர்தான்

என்ன கணக்கெடுப்பு

என்ன கணக்கெடுப்பு

இந்த நிலையில் இந்தியா சீனா மோதல் குறித்து மக்கள் இடையே IANS CVoter சர்வே நடத்தியது. இந்தியா சீனா மோதல், இந்தியா இதில் எப்படி பதில் அளித்தது, சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கிறது, இந்தியா இனி என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளை கேட்டு இருந்தனர். இந்த சர்வேயின் படி, மொத்தம் 89% மக்கள் இந்தியா - சீனா பிரச்சனையில் பிரதமர் மோடியை நம்புகிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

சீனா பதிலடி

சீனா பதிலடி

அதேபோல் இந்தியாவிற்கு தற்போது நம்பர் 1 பிரச்சனை சீனாதான் என்று 68.3% பேர் தெரிவித்து உள்ளனர். இல்லை இந்தியாவின் பிரச்சனை பாகிஸ்தான்தான் என்று 31.7% பேர் தெரிவித்து உள்ளனர். அதேபோல் லடாக் சண்டையில் சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கவில்லை என்று 60.2% பேர் தெரிவித்து உள்ளனர். இந்தியா தக்க பதிலடி கொடுத்துவிட்டது என்று 39.8% பேர் தெரிவித்துள்ளனர்.

ராகுல்

ராகுல்

இன்னொரு பக்கம் 73.6% பேர் எதிர்க்கட்சியை விட ஆளும் கட்சி மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். அதேபோல் 16.7% பேர் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இன்னும் இதில் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை என்று 61.3% பேர் கூறியுள்ளார். ராகுல் மீது நம்பிக்கை உள்ளதாக 39% பேர் கூறியுள்ளனர்.

Recommended Video

    BoycottChina | Make In India-வை மாறும் சீன நிறுவனங்கள்
    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    சீனாவை பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். சீனாவின் பொருட்கள் எதையும் வாங்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள். 68.2 % பேர் சீனாவின் அனைத்து விதமான பொருட்களையம் வாங்க கூடாது என்று கூறியுள்ளனர். 31.8% பேர் சீனாவின் பொருட்களை வாங்கலாம். சீனாவின் பொருட்களை நாம் புறக்கணித்தால், அதனால் சீனாவிற்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கணக்கெடுப்பில் மக்கள் கூறியுள்ளனர்.

    English summary
    China standoff with India: India didn't give a befitting reply to China says Majority in C Voter survey results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X