டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.1000 கோடி ஹவாலா நெட்வொர்க் அம்பலம்.. சீன நாட்டுக்காரர் லூயோ சாங் மீது பண மோசடி சட்டம் பாய்ந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ .1000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீனரான லூயோ சாங் என்ற சார்லி பெங் மீது பணமோசடி சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Recommended Video

    China Hawala Racket : இந்தியாவில் 1000 கோடி ஹவாலா மோசடியில் சிக்கிய சீனர்

    'சார்லி பெங்' என்ற போலி பெயரில் இந்தியாவில் வசிக்கும் லூயோ, இங்கே சீனாவுக்காக உளவு பார்த்துள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    ஹவாலா நெட்வொர்க் மூலம் பணப் பரிமாற்றம் செய்த தகவலின்பேரில் சீன நாட்டைச் சேர்ந்த 42 வயதான லூ சாங் வருமான வரித்துறை பிடியின்கீழ் வந்தார்.

    2012-லேயே தோன்றிய கொரோனா.. வவ்வால் கழிவுகளால் சுரங்க ஊழியர்கள் 3 பேர் பலி.. மூடி மறைத்த சீனா2012-லேயே தோன்றிய கொரோனா.. வவ்வால் கழிவுகளால் சுரங்க ஊழியர்கள் 3 பேர் பலி.. மூடி மறைத்த சீனா

    கைது

    கைது

    லூ சாங் மோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் வழக்கில் 2018ல் சிறப்பு செல் மூலம் கைது செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான், தற்போது சிக்கியுள்ளார் அவர். ஐடி சோதனைகளுக்குப் பிறகு, அமலாக்க இயக்குநரகம் (இடி) டெல்லி காவல்துறையிடம் விவரங்களை கோரியதுடன், அவர் மீது பணமோசடி வழக்கையும் பதிவு செய்துள்ளது. லூ சாங் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹவாலா மோசடி நடத்தியுள்ளார்.

    அடையாள அட்டைகள்

    அடையாள அட்டைகள்

    இதற்காக, இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளார். சார்லி பாங் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் வைத்திருந்தார். பந்தன் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள வங்கி ஊழியர்களின் உதவியுடன் தினசரி சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்துள்ளார். 40க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்திருக்கிறார்.

    ரெய்டுகள்

    ரெய்டுகள்

    ஐடி சார்பில் பல வங்கி ஊழியர்களிடமும் சோதனை செய்துள்ளது. டெல்லி, குர்கான் மற்றும் காசியாபாத்தில் சுமார் 24 பகுதிகளில் ஐடி ரெய்டுகள் நடந்துள்ளன. லூ சாங்கிற்கு எதிரான வழக்கு ஏற்கனவே சீன அரசுடான இந்திய தரப்பின் மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    சீனா கோபம்

    சீனா கோபம்

    சீன தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், "சீன அரசு எப்போதும் வெளிநாட்டு சீன குடிமக்களை உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. அதே நேரத்தில், சீன நாட்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு பக்க சார்பற்ற முறையில், சட்டத்தை அமல்படுத்த வெளிநாட்டு அரசுகளையும், தொடர்புடைய துறைகளும் நாங்கள் கோருகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The ED has registered a case under the Money Laundering Act against a Chinese citizen Lou Sang alias Charlie Peng, arrested in a Rs 1000 crore hawala racket case. Living in India by the fake name of 'Charlie Peng', the man was actually spying for China here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X