டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிர வான்வெளியில் திடீரென நுழைந்த சீன ராக்கெட்! பொதுமக்கள் குழப்பம்.. நடந்தது என்ன? பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் நேற்றிரவு வானத்தில் தோன்றிய விண்கற்கள் பொழிவது போன்ற நிகழ்வு குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Maharashtra வான்வெளியில் திடீரென நுழைந்த Chinese Rocket

    பொதுவாகவே விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் தங்கள் பணியை முடித்தவுடன் விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். விண்வெளியில் அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதி சிதறும் வாய்ப்புகளும் உள்ளது.

    அதேபோல சில அரிய நேரங்களில் ராக்கெட்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் பூமியில் விழ வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான சமயங்களில் இவை பூமியை அடையும் முன்னரே வெப்பத்தால் எரிந்துவிடும்.

    சூரியனில் திடீரென எழுந்த பெரும் கதிர் வீச்சு.. படம் பிடித்த நாசா! பூமியில் நாளை தாக்கம் ஏற்படுத்தும்சூரியனில் திடீரென எழுந்த பெரும் கதிர் வீச்சு.. படம் பிடித்த நாசா! பூமியில் நாளை தாக்கம் ஏற்படுத்தும்

     மகாராஷ்டிரா வானம்

    மகாராஷ்டிரா வானம்

    இதுபோன்ற நிகழ்வு தான் இப்போது மகாராஷ்டிராவில் காணப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வானத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு எரியும் ஒளிக்கோடு போன்றது காணப்பட்டது. விண்கற்கள் பொழியும் நிகழ்வு என்றே முதலில் இதைப் பலரும் கருதினர். இந்தச் சூழலில் இது விண்கற்கள் பொழியும் நிகழ்வு இல்லை என்றும் இது சீன ராக்கெட் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததன் எச்சம் என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

     சீனா ராக்கெட்

    சீனா ராக்கெட்

    கடந்த பிப்ரவரி 2021ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சாங் ஜெங் 5 பி என்ற ராக்கெட்டை அனுப்பியது. இந்த ராக்கெட் நேற்றைய தினம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாகவும் அதன் ஒரு பகுதியே இந்தியாவின் மீது வானத்தில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. பொதுவாக ராக்கெட் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என்றும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்றுமே கூறப்படுகிறது.

     அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்

    அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்

    நேற்றைய தினம் சீன ராக்கெட் மீண்டும் வளிமண்டலத்தில் நுழையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் ஜொனாதன் மெக்டோவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த பிப்ரவரி 2021இல் ஏவப்பட்ட சாங் ஜெங் 3B- Y77 ராக்கெட்டி மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்த நிகழ்வு தான் இது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

     சீனா

    சீனா

    விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் உள்ள நிலையில், அதற்குப் போட்டியாகச் சீனா தனக்கென சொந்தமாக ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்கச் சீனா முயன்று வருகிறது. சீனாவின் சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆய்வு லட்சியங்களை நிறைவேற்ற இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகச் சீனா லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் பல்வேறு பகுதிகளை விண்வெளிக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Blazing streak of light was seen in the night sky over several parts of Maharashtra: Chinese rocket reentering Earth’s atmosphere latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X