குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உடனடி உதவிக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விமானப் படை
டெல்லி: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், உள்ளூர் போலீஸார், நீலகிரி மாவட்ட ஆட்சியர், உள்ளூர் மக்களுக்கு இந்திய விமான படை நன்றி தெரிவித்து ட்வீட் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8 ஆம் தேதி சூலகிரியிலிருந்து வெலிங்டன் சென்ற இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதையறிந்த உள்ளூர் மலை கிராம மக்கள் உடனடியாக தீப்பிடித்து எரிந்த விமானத்தை அணைக்க முயற்சித்தனர்.
சிறிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வந்து அணைத்துள்ளனர். பின்னர் உள்ளூர் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடுக்கிவிட்டார்.

பிபின் ராவத்
இந்த விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்திருந்ததால் அவரின் நிலை குறித்து தெரியாமல் மீட்பு படையினர் தொய்வடைந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் விமான விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

6 மருத்துவர்கள்
இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 6 மருத்துவர்கள் கொண்ட குழு அங்கு சென்றனர். இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video

இந்திய விமான படை
இந்த நிலையில் இந்த 13 பேரின் உடல்களை மீட்பது, கருப்பு பெட்டியை கண்டறிவது, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தியது, வெலிங்டன்னில் இருந்து சூலகிரிக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசும் உள்ளூர் கிராம மக்களும் ராணுவத்தினருக்கு உதவியிருந்தனர். இதற்கு இந்திய விமான படை நன்றி தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து இந்திய விமான படை அனுப்பிய ட்வீட்டில் ஹெலிகாப்டர் விமான விபத்தின் போது மீட்பு பணிகளுக்கும் மருத்துவ உதவிகளுக்கும் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், நீலகிரி ஆட்சியர் அம்ரித், காட்டேரி கிராம மக்கள், உள்ளூர் போலீஸார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications