தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யணும்.. நாடு முழுவதும் வெடித்த போராட்டம்! களத்தில் இறங்கிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டத்தை தொடங்கியுள்ளது. டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, டேராடூன், சண்டிகர், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தேர்தல் ஆணைய அலுவலகங்களை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகிறது. வாக்காளர் பட்டியல், எஸ்ஐஆர், புதிய பெயர்களை நீக்குவது, சேர்ப்பது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பலமுறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக செய்தி வெளியானது. கடந்த 10 மாதங்களில் மட்டும் குறைந்தது 14 முறை இதுபோன்ற ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Congress election comssion Congress protest Gyanesh Kumar Resignation

காங்கிரஸ்

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்து காங்கிரஸும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பன காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

பெரும் போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் இன்று நாடு முழுக்க மிக பெரிய போராட்டத்தை தொடங்கியுள்ளது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணைய அலுவலகங்களை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் திரண்ட நிலையில், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. ஜம்முவில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நசீர் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற பேரணியை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். டேராடூன் உள்ளிட்ட நகரங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக vs காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இது பூதாகரமாக வெடித்துள்ளது.

அதேநேரம் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்துள்ளது. தேர்தல் தோல்விகளுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் விரக்தியில் தேர்தல் ஆணையத்தை குறிவைப்பதாக பாஜக தரப்பு கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே தேர்தல் ஆணையத்துக்குள் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது குறித்து ஆணையமும் விளக்கம் அளித்துள்ளது. மாறுபட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் என்பது வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதிதான் என்றும் கடந்த ஓராண்டில் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞானேஷ்குமார் பதவி விலகவில்லை என்றால் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுக்க போராட்டத்தை நடத்த போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையே இப்போது காங்கிரஸும் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதால் இது வரும் நாட்களில் பெரிதாக வெடிக்கும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+