UPI கட்டணம்! ஒரு மாதத்திற்கு முன்னாடியே தெரிந்தும்.. எதிர்ப்பு தெரிவிக்காத காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: UPI கட்டணம் குறித்து காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை அடுக்கி வருகிறது. எல்லாம் ஓகேதான்.. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிதிக்குழுவில் இதை தெரிவித்தபோது, நிதிக்குழுவில் இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்பிக்கள் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையெல்லாம் பார்க்கும்போது.. என்ன ரங்கா ஜோக் காட்றீங்களா? என்று கேட்க தோன்றுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஒரு மாசத்துக்கு முன்னாடியே.. UPI கட்டணம் குறித்து தெரிந்திருந்தும்.. ஏன் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Congress UPI P Chidambaram

பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்பிக்களான ப.சிதம்பரம், மணிஷ் திவாரி, கௌரவ் கோகோய், கிஷோர் லால், கே.கோபிநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அக்குழுவின் 44வது அறிக்கையின்படி, இதி்ல் எம்பிக்கள் யாரும்தங்களின் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.

ஆனால், இந்த UPI கட்டணத்திற்கு காங்கிரஸ் தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நடைமுறையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி வலியுறுத்திள்ளார். ராகுல் காந்தி பேசுவது நியாயம்தான்.. ஆனால், இந்த நியாயத்தை ஏன் நிதிக்குழு கூட்டத்தில் கதர் தலைவர்கள் பேசவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வி!

நிதிக்குழு இந்த கட்டணத்தை பரிந்துக்க சில காரணங்களை தெரிவித்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் சைபர் செக்யூரிட்டி, மோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான செலவினங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவேதான் இந்த் கட்டணம் பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய கட்டணம் அக்.15 முதல் அமலுக்கு வருகிறது. இது வணிகர்களுக்கான கட்டணம் மட்டுமே. தனிநபர்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்களுக்கும் சிறிய தொகைகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது. ரூ.2,000க்கும் மேல் வணிகர்களுக்காக செலுத்தப்படும் தொகைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இது அரசாங்கமோ அல்லது NPCIயோ வசூலிக்கும் வரி கிடையாது. மாறாக வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஆப் நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் கட்டணமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+