"ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்!" காங்கிரஸ் மீண்டும் கையில் எடுக்கும் அதே ஆயுதம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
டெல்லி: காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு குறித்து சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியில் முழு மறுசீரமைப்பைச் சேர்ந்து, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில் தான், பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து தனது திட்டத்தை விளக்க, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. இருப்பினும், அது கடைசி நேரத்தில் நடக்காமல் போனது.

காங்கிரஸ் மறுசீரமைப்பு
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க வரும் மே இரண்டாவது வாரத்தில் ராஜஸ்தானின் உதய்பூரில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், அந்த சிறப்பு அமர்வுக்கு முன்னதாக காங்கிரஸ் உயர்மட்ட குழு நேற்று நடைபெற்றது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்
ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட் மட்டுமே வழங்குவது தொடர்பாக ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் சிறப்புக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அக்கட்சி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான்
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மற்றொரு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் உதய்பூர் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்துவிட்டால், இது நடைமுறைக்கு வரும். அதேநேரம் இந்த விதி நேரு குடும்பத்தினருக்குப் பொருந்தாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். பாஜகவை வீழ்த்த இது முக்கிய ஆயுதமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ் மூத்த தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு
அதேபோல எந்தவொரு விஷயத்திலும் கூட்டாக முடிவெடுக்க மீண்டும் நாடாளுமன்றக் குழுவை அமைப்பது தொடர்பான திட்டத்தையும் காங்கிரஸ் மீண்டும் முன்வைக்கலாம். அதேபோல 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கும், "வெறுப்பு அரசியலை" எதிர்கொள்வதற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று அந்த மூத்த தலைவர் குறிப்பிட்டார்.

திட்டம் என்ன
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை மக்களிடம் முன்வைக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த கால தேர்தல்களில் பிரிவினைவாதம் மற்றும் வகுப்புவாத பிரச்சாரங்களை அதிகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதைத் தடுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தேர்தல் பிரசாரங்களை நிர்வகிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தனியாகத் தேர்தலைப் பிரிவை உருவாக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 50 வயதுக்குட்பட்ட இளம் தலைவர்களுக்குப் பாதி பதவிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.

டெல்லி செயற்குழு கூட்டம்
டெல்லியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இவை அனைத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருந்த போதிலும், இதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ராஜஸ்தானில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னரே, இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் கூட்டத்தில் இப்படிப் பல முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஏன் முக்கியம்
இதில் ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட் என்பது காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த 2008ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தல் சமயத்திலும் இதேபோல ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட் என்ற விதியை பின்பற்றியது. இருப்பினும், அதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய இழப்பே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications