குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் திடீரென வந்த மேக கூட்டம்.. ராஜ்நாத்சிங்கிடம் அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் மரணமடைந்த நிலையில், மேகக்கூட்டங்கள் வந்ததால் தான் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த விபத்து என்பது நிகழ்ந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி , MI-17V5 ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சென்ற போது மோசமான வானிலை நெஞ்சன்பசத்திரம் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகே குரூப் கேப்டன் வருண் சிங்கும் மருத்துவமனையில் வீர மரணமடைந்தார்.

விசாரணை குழு

விசாரணை குழு

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வீந்தர் சிங் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி மற்றும் விபத்து நடந்த இடத்தில் விசாரணை குழுவினர் தீவிர ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். விபத்து நடந்தபோது எடுக்கப்பட்டு பின்னர் வீடியோக்களில் தெளிவாக பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், மேகக்கூட்டத்திற்கு சென்ற பின்னர் விபத்து ஏற்பட்டதும் விசாரணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மோசமான வானிலை

மோசமான வானிலை

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் விமானியின் தவறு தான் விபத்துக்கு அடிப்படை காரணமாக அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் மேகங்களுக்குள் ஹெலிகாப்டர் பறக்கும்போது செயல்படுத்தப்பட வேண்டிய விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த விளக்கங்கள் அப்போது வெளியிடப்படவில்லை.

சிஐஎஃப்டி வகை விபத்து

சிஐஎஃப்டி வகை விபத்து

அதேநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் இயந்திர குறைபாடுகள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், சீரற்ற காலநிலையால் ஹெலிகாப்டர் திசை திருப்பப்பட்ட போது தற்செயலாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஏர் மார்ஷல் மன்வீந்தர்சிங் தலைமையிலான விசாரணைக் குழு முடிவுக்கு வந்து இருப்பதாகவும், இந்த விபத்து சிஎஃப்ஐடி என்ற வகை விபத்து என கூறப்படுகிறது. அதாவது நிலப்பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட விமான விபத்து என தகவல் வெளியாகி இருந்தது.

அறிக்கை ராஜ்நாத்சிங்கிடம் தாக்கல்

அறிக்கை ராஜ்நாத்சிங்கிடம் தாக்கல்

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரி மான்வேந்திர சிங் தலைமையிலான முப்படை குழு விசாரணை அறிக்கையை அளித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரணம் என்ன?

காரணம் என்ன?

திட்டமிட்ட பாதையில் மேகக்கூட்டங்கள் திடீரென வந்ததால் தான் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த விபத்து என்பது நிகழ்ந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஒரு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+