டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளம்பியாச்சு.. 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட்கிட்.. ஆன் தி வே, சீனாவில் இருந்து இந்தியா நோக்கி விரைகிறது

6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியா வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: எத்தனையோ பிரச்சனைகள், குழப்பங்களை தாண்டி.. ஒருவழியாக நமக்கு ரேபிட் டெஸ்ட் கிட் வரப்போகிறது.. சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி நமக்கு கிடைத்துள்ளது. அநேகமாக இந்த சரக்கு விமானம் இன்று சாயங்காலம் நம் நாட்டுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

rapid

சீனாவில் வெடித்து கிளம்பிய வைரஸ் உலக நாடுகளை மரண பீதியில் நடுங்க வைத்து வருகின்றது.. இந்த கொரோனாவுக்கு இதுவரைக்கும் எந்த தடுப்பு மருந்தும் இல்லை... குணமாக்கும் மருந்தும் இல்லை.. அதை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் இந்த வைரஸ் பெருமளவு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைதான் தாக்கும் என்ற அறிகுறி தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க எந்த மருத்துவ வசதியும் இல்லை.. ஆனால், இதற்கான ரேபிட் டெஸ்ட் கிட்-டினை சீனா கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.. அவ்வாறு அறிந்து கொண்டால், பிசிஆர் டெஸ்ட் மூலம் நமக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதையும் ஈஸியாக கண்டுபிடித்து கொள்ள முடியும்.. இந்த கிட்-தான் நமக்கு இல்லாமல் இருந்தது.. இதற்காக ஏற்கனவே சீனாவிடம் இந்தியா கேட்டிருந்த நிலையில் மிகவும் குறைவாகத்தான் வந்ததாக சொல்லப்பட்டது.

coroanvirus: rapid test kits arrived india from china

இதற்கு பிறகு நமக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த கிட் வந்து சேரவில்லை.. இதுதான் பெரிய சிக்கலை இந்தியாவுக்கு கிளப்பியது.. தமிழகமும் இந்த பிரச்சனையை சந்தித்தது.. தென்கொரியா அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டதாகவும் செய்திகள் வந்து குழப்பியடித்தன.. ஆனால், சீனாவிடம் நமக்கு போதுமான கிட்-கள் கேட்கப்பட்டுள்ளன, எப்படியும் 2,3 நாளில் வந்து சேர்ந்துவிடும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் நம்பிக்கை அளிக்கப்பட்டது.

அதன்படியே சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது.. சரக்கு விமானத்தில் இன்று மாலை இந்தியா வரவுள்ளது... இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. செய்வதற்காக ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    மக்களிடம் உண்மைகளை மறைத்த சீன அரசு... வெளியான தகவல்

    ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு சுங்கத்துறை அனுமதி கிடைத்தவுடன் டெல்லியில் உள்ள தேசிய மலேரியா ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து விமானம் மூலம் அனுப்பப்படும்.. குறிப்பாக வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை தந்து பகிர்ந்தளிக்கப்படும் என நம்பப்படுகிறது.. அந்த வகையில் மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தானுடன், நம் தமிழகத்துக்கும் கிட்-கள் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.. இது நமக்கு மிகபெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது..

    English summary
    coroanvirus: rapid test kits arrived india from china and It is expected to arrive this evening
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X