கொரோனா 3வது அலை சீக்கிரம் முடிஞ்சுடுமோ..! இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
டெல்லி : கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்றைவிட இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று சுமார் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சுமார் 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா
அதே வேகத்தில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவிய வைரஸ் தற்போது இந்தியாவில் பரவியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா 3வது அலையும் தொடங்கியது. ஜனவரி முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு அடுத்த நாட்களில் லட்சக்கணக்கை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக உட்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வருகிறது.

பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 3.33 லட்சத்தை விட சுமார் 30 ஆயிரம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக 439 புதிய இறப்புகளும் பாதிவாகியுள்ள நிலையில் இந்த அளவும் நேற்றைய எண்ணிக்கையை விட குறைவாகும். தற்பொதைய நிலவரப்படி நாடு முழுவதும் வைரஸ் தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 4,89,848 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி மும்பையில் பாதிப்பு
22,49,335 பேர் தற்போது கொரோனாவுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது மொத்த எண்ணிக்கையில் 5.69 சதவிகிதம் ஆக உள்ளதாகவும், நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 93.07 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் 9,197 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 35 தொடர்புடைய இறப்புகள் மற்றும், மும்பையில் 2,550 பேருக்கும் நோய்த்தொற்றுகளும் மற்றும் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதேபோல் பெங்களூரில் தினசரி 26,299 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கை
இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை கொண்டிருக்கும் கோ-வின் தடுப்பூசி போர்டலில் உள்ள தகவலின்படி, நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசி அளவுகள் 162 கோடியைத் தாண்டியுள்ளன எனவும், இதுவரை 93 கோடி பேருக்கு மேல் முதல் டோஸ் மற்றும் 68.4 கோடி பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுப் பிரிவைச் சேர்ந்த 4.19 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications