கொரோனா 4வது அலை வருமா, வராதா? வேலூர் சிஎம்சி முன்னாள் பேராசிரியர் கணிப்பு இதுதான்!
டெல்லி: கொரோனா நான்காவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; அதேசமயம் நான்காவது அலை வராது என உறுதியாக சொல்லமுடியாது என வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள் தொடங்கி எந்த நாடும் கொரோனா பெருந்தொற்றின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.
ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என அடுத்தடுத்து புதிய கொரோனா வகைகள் உருமாறி வருவதால் அதை முற்றிலுமாக அழிப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற உருமாறிய கொரோனா வகைகளால் அடுத்தடுத்து அலைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

கொரோனா
கொரோனா முதன்முதலாக 2019ல் தொடங்கி 2020ல் உலக நாடுகளில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது, அதன்பிறகு 2021ல் கொரோனா இரண்டாம் அலையில், டெல்டா வைரஸின் தாக்கத்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன. இந்த டெல்டா வைரஸைப் பார்த்து உலக நாடுகளே பயந்துபோய் உள்ளன.

ஒமிக்ரான்
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்தது. கொரோனா மூன்றாவது அலையாக இது கருதப்பட்டது. ஒமிக்ரான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அதிக அளவில் பரவியது. ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி என நினைக்க வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தினார்கள்.

4வது அலை
இந்நிலையில் உலக நாடுகள் பலவற்றுள் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கொரோனா நான்காம் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, சி.எம்.சி வேலூரின் முன்னாள் பேராசிரியரும் வைராலஜி துறை நிபுணருமான ஜேக்கம் ஜான் இதுகுறித்து கூறுகையில், '' கொரோனா நான்காவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; ஆனாலும் நான்காவது அலை வராது என உறுதியாக சொல்லமுடியாது.

வைரஸ்
பல இடங்களில் ஒமிக்ரானை விட சில வைரஸ்கள் உருவாகி வருகிறதா என பார்க்க வேண்டும். வைரஸின் ஜெனிட்டிக் மாறுபாடு குறித்தும் விரிவாக கவனிக்க வேண்டும். கொரோனா அலை குறித்து கணக்குப் பார்ப்பது வினோதமானது. அப்படி பார்க்கும்போது சில பிரச்சனைகளும் ஏற்படும். அதை வைத்துப் பார்த்தால், கொரோனா அடுத்த அலைக்கு பயப்படத்தேவையில்லை'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications