Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா 3 ஆம் அலை; அக்டோபரில் உச்சம் தொடும்: பிரதமர் அலுவலகத்துக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா 3வது அலை அக்டோபர் மாதம் கடுமையாக நாடு முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் நிபுணர் குழு, பிரதமருக்கு வழங்கிய அறிக்கையில் எச்சரித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

    அக்டோபரில் கொரோனா 3வது அலை உச்சத்தில் இருக்கலாம்… மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

    கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா அலை இந்தியா முழுக்க மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    எனவே, மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காத அளவுக்கு அவதிப்பட்டனர். மருத்துவமனைகளில் படுக்கைகளே கிடைக்காமல் உயிரை காப்பாற்றிக் கொள்ள மக்கள் தத்தளித்து தடுமாறினார்கள். இத்தனைக்கும் காரணம், ஊரடங்கை அதிகம் தளர்த்தியதோடு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் இருந்ததும்தான் என்று அப்போது தகவல்கள் வெளியாகின.

     பேரிடர் அமைப்பு குழு

    பேரிடர் அமைப்பு குழு

    இந்த நிலையில்தான் 3வது அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 3வது அலை குறித்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளது.

     அக்டோபர் மாதம்

    அக்டோபர் மாதம்

    அந்த அறிக்கையில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடக் கூடும் என்றும், அதிலும், குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வென்டிலேட்டர்கள், குழந்தைகள் சிகிச்சை மருத்துவர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி முக்கியம்

    தடுப்பூசி முக்கியம்

    அது மட்டுமல்லாது, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இணை நோய்கள் இருக்கும் குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    மருத்துவமனை ஏற்பாடு

    மருத்துவமனை ஏற்பாடு

    என்னதான், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அக்டோபர் இறுதியில் கொரோனா 3வது அலை தீவிரமாக பரவ வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பரவினால் அவர்களை பார்த்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உதவி தேவை. எனவே அவர்கள் தங்குவதற்கும் மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மோசமான கட்டமைப்பு

    மோசமான கட்டமைப்பு

    இந்தியாவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு 82 சதவீத பற்றாக்குறை இருக்கிறது, சமுதாய ஆரோக்கிய கூடங்களில் 63 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது, இப்போதே இவ்வளவு கட்டமைப்பு குறைபாடுகள் இருப்பதால், நோய் பாதிப்பு பரவினால் அதை விட மோசமாகக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில், குழந்தைகளை கொரோனா தாக்கக் கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் அறிக்கையொன்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+