உயிருக்கு ஆபத்தானதா கொரோனா XE! 4வது அலைக்கு அடித்தளமிடுமா? பிரபல வைரலாஜி நிபுணர் தரும் முக்கிய தகவல்
டெல்லி : கொரோனா XE மாறுபாடு மற்ற பாதிப்புகளை விட அதிகமாக பரவக்கூடியதா? இது இந்தியாவில் 4வது அலையை ஏற்படுத்துமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இவ்வகை வைரஸ் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இல்லை என்று பிரபல நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்,
Recommended Video
2020ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மிகத் தீவிரமாக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு 3ஆம் அலைக்குப் பிறகு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் அதிவேகமாக பரவக்கூடிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான "எக்ஸ் இ"வகை பாதிப்பு கண்டறியப்பட்டு பீதியை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை குஜராத் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா XE
எற்கனவே இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், இக்ஸ் இ வகை வைரஸ் இதற்கு வழிகோலும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் இவ்வகை வைரஸ் மிக வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளதால் அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா XE மாறுபாடு மற்ற பாதிப்புகளை விட அதிகமாக பரவக்கூடியதா? இது இந்தியாவில் 4வது அலையை ஏற்படுத்துமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

டாக்டர் ககன்தீப் காங்
இந்நிலையில், இவ்வகை எக்ஸ் இ வைரஸ் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இல்லை என்று பிரபல நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது பரவிவரும் எக்ஸ் இ வகை வைரஸ் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

கவலைப்பட தேவையில்லை
வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியரான ககன்தீப் காங், எக்ஸ்இ கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏன் புதிய வகை வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டும்? வைரஸ் என்றாலே அதன் உருமாறிய வைரஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதிலும் கொரோனா வைரஸ் என்றாலே உருமாறிய வைரஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அது பற்றி அறிவித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

ஆபத்து இல்லை
இது முந்திய வைரஸ்களை விட அதிகமாக பரவும் திறன் கொண்டது தான். ஆனால் அது ஆபத்தை ஏற்படுத்துமா என்றால் இந்த நொடி வரை அப்படி இல்லை. ஏற்கனவே பிஏ2 வைரஸ் பரவிய போது மிகுந்த அச்சம் ஏற்பட்டது, ஆனால் பிஏ1ஐ விட அதிக ஆபத்தை கொண்டிருக்கவில்லை. அதிகம் வேகமாக பரவுகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நான் கூட அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று ககன்தீப் காங் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications