டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா பாதிப்பு மிகமிக உச்சகட்டமாக இருக்கலாம்- வல்லுநர்கள் குழு வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பானது மிக மிக உச்சகட்டமனதாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு எச்சரித்துள்ளது.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,77,864 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 26,828 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,73,007 ஆகும்.

    எய்ம்ஸ்-ன் கொரோனா தடுப்பூசி கோவேக்சின்.. நாளை முதல் மனித சோதனை தொடங்குகிறது!எய்ம்ஸ்-ன் கொரோனா தடுப்பூசி கோவேக்சின்.. நாளை முதல் மனித சோதனை தொடங்குகிறது!

    4 மாநில பாதிப்பு

    4 மாநில பாதிப்பு

    மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த 4 மாநிலங்களில் மட்டுமே சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா 4-வது இடத்தில் உள்ளது.

    செப்டம்பரில் படுமோசம்

    செப்டம்பரில் படுமோசம்

    தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பரிசோதனைகள் நிலையில் இருந்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலை நீடித்தால் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சகட்டமானதாக இருக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

    பொதுமக்களின் பொறுப்பு

    பொதுமக்களின் பொறுப்பு

    Public Health Foundation of India -ன் தலைவர் பேராசிரியர் கே. ஶ்ரீநாத் ரெட்டி இது தொடர்பாக கூறியுள்ளதாவது; செப்டம்பர் மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிகமிக மோசமானதாக இருக்கும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என பொதுமக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயம்.

    கட்டுப்பாடுகள் தேவை

    கட்டுப்பாடுகள் தேவை

    கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கமும் இன்னமும் வேகமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் சராசரியாக 30,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தரப்பில் இருந்தும் மேற்கொள்ள வேண்டும். அரசு மற்றும் பொதுமக்களின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் கொரோனாவை கட்டுப்படுத்தவும் முடியும். இவ்வாறு ஶ்ரீநாத் ரெட்டி கூறினார்.

    English summary
    As India continues to register a new record every day in its coronavirus cases, experts have believed that its peak could be as early as mid-September.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X