உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 2,68,58,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு 10,45,826 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,78,8,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவில்தான் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Coronavirus updates world wide : world corona recoveries 3,56,92,636

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,78,090 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 48,89,994 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 2,14,989 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 25,73,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,82,073 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 56,59,110 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவினால் 1,03600 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 919,363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,940,499 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,295,302 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 146,773 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் 498,424 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவில் கொரோனாவிற்கு 12,25,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் கொரோனாவிற்கு 8,62,158 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 8,52,838 பேரும், பெரு நாட்டில் 8,29,999 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் 798,486 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 79,982,394 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. மருந்து கண்டுபிடிக்காவிட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள் கொரோனா உடன் போராடி மீண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+