சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. தாஜ்மஹாலில் அமல்.. பிற இடங்களுக்கு பொருந்துமா?
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கான பரிசோதனை என்பது உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற கட்டுப்பாடு என்பது பிற சுற்றுலா தலங்களுக்கு உண்டா? கிடையாதா? என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சீனாவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஏராளமானவர்கள் மரணமடைவதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் கொரோனா பரவல்
சீனாவில் ஓமிக்ரானின் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவல் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசாவை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அறிவுரை
மேலும் பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, மாநில அரசு என அனைவரும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். மாஸ்க் அணிய வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் அறிவுறுத்தி வருகின்றன.

தாஜ்மஹால் பார்க்க சோதனை கட்டாயம்
இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி வரும் தொடர் விடுமுறையால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் அங்கு குவியலாம் என்பதால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரி கூறுவது என்ன?
இதுகுறித்து மாவட்ட சுகாதார தகவல் அலுவலர் (ஆக்ரா) அனில் சத்சங்கி கூறுகையில், ‛‛கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கொரோனா பரவலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார். இதனால் தற்போது தாஜ்மஹால் பார்க்க செல்வோருக்கு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பிற சுற்றுலா இடங்களுக்கு...
இருப்பினும் கூட தற்போதைய சூழலில் தாஜ்மஹாலை பார்வையிட செல்வோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிற சுற்றுலா தலங்களுக்கு இந்த நடைமுறை என்பது பொருந்தாது. ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால் மத்திய, மாநில அரசுகள் இதுபற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications